சுற்றுசூழலியல் பாடம் படிப்போம் ஐஏஎஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோம்

Posted By:

ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கான கேள்விக்கான விடைகளை தெரிவு செய்வதுதானே என அசாட்டாக இந்த தேர்வை நாம் அனுக முடியாது. நாட்டின் மிக முக்கியமான பதவிகளான ஆட்சியாளர், இந்திய போலீஸ் பதவி, சுங்கததுறை, வெளிநாட்டு தூதுவர் என நாட்டின் முக்கிய துறைகளை நிர்வாகம் செய்யும் அதிகாரம் பெற்றுள்ள துறைகளுக்கு தேர்வு என்பதன் முழுமையாக உணரும்படியான தேர்வுகள் இருக்கும். அதற்கான முதன்நிலை தேர்வில் பொதுஅறிவினை நாம் உணர்ந்து படிக்க வேண்டும். 

ஐஏஎஸ் தேர்வில் இந்திய வரலாறு மற்றும் இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்திய பொருளாதாரம் நடப்பு நிகழ்வுகள் அறிவியல் போன்ற பாடங்களுடன் புவியியல் பாடமும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஒரே முதண்மை தேர்வு இரண்டு பதிவுகள்:

ஐஏஎஸ் தேர்வில் புவியியல் பாடத்துடன் சுற்றுசூழலியல் பாடமும் கடந்த காலங்களில் கேட்கப்பட்டு வருகின்றது. இந்திய வனத்துறை ஆபிசர்கள் பதவிக்கான முதன்நிலை தேர்வும் ஒன்றாக நடக்கும் தேர்வு என்பதால் காலநிலை மாற்றம் , பருவ மாற்றம், இந்திய வன வாழிடங்கள், சுற்றுச்சூழல் மாசு, இந்தியா பங்கேற்கும் மாநாடு மாநாட்டில் ஏற்ப்படுத்தப்பட்ட தீர்மானங்கள் குறித்து படிக்க வேண்டும்.  இரண்டு பதவிகளுக்கான ஒரே முதன்நிலை தேர்வு.  

அடிப்படை புத்தகங்கள் சிபிஎஸ்சி பாடத்தில் என்வைரான் மெண்டல் குறித்து குறிப்புகள், தலைப்புகள் நிறைய இருக்கும். அதனை முழுவதுமாக படிக்க வேண்டும்.

இக்னோ மெட்டீரியல் :

யூபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான என்வைரன்மெண்ட் பாடத்தை தொடர்ந்து சிபிஎஸ்சி புத்தகத்தை முடித்தப்பின்பு இக்னோ பல்கலைகழக புத்தகங்கள் படிக்க வேண்டும். அதனை படிக்கும் பொழுது முழுமையாக படியுங்கள். தலைப்புகள் வாரியாக குறிப்புகள் எடுத்து படிக்கவும்.

மாத இதழ்களின் சுற்றுசூழலியல் தொகுப்புகள்:

இந்து மற்றும் யூபிஎஸ்சி தேர்வுக்கான சிறப்பு இதழ்களில் சுற்றுசூழலியல் பாடங்கள் பற்றிய தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. பையோ டைவர்சிட்டி, கிளைமேட் சேஞ்ச் குறித்து அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை முழுவதுமாக படிக்க வேண்டும். நீங்கள் படிக்க வேண்டிய தொகுப்பினை தொடர்ந்து பின்ப்பற்றவும்.

சுற்றுசூழலியல் அடிப்படை பாடங்கள்:

அடிப்படை சுற்றுசூழலியல் வரையரைகள், சுற்றுசூழலியல் வகைப்பாடுகள், பையோஸ்பியர், எக்கோ சிஸ்டம், சுற்றுசூழலியல் உள்ளீடு மற்றும் வெளியீடுகள், உணவு சங்கிலி, சுற்றுசூழலியல் பிரமீடுகள், எக்கால்ஜி வரையறைகள் அனைத்தும் அடிப்படைப் பாடங்கள் ஆகும்.

மேம்படுத்தப்பட்ட சுற்றுசூழலியல் பாடங்கள்:

சுற்றுசூழலியலின் அவசியம் நாம் அவற்றை எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் மற்றும் சுற்றுசூழலியலுக்காக அரசு மற்றும் என்ஜிஒவின் பங்கு, மக்களின் பங்கேற்பு, சுற்றுசூழலியல் சுற்றுலா , இந்தியாவில் சுற்றுசூழல் பாதுகாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் என்னென்ன நடவடிக்கைள் எடுக்கப்பட்டன.

நகரத்தில் சுற்றுசூழலியல்:

நகரத்தில் உள்ள பகுதிகள், சுற்றுசூழல் மாசுபாடு, மின்சாதனப் கழிவுகளின் மேலாண்மை , ரியல் எஸ்டேட், பாலீதீன் கவர்கள், டவர் ரேடியேசன் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றன்.

கனிம சுற்றுசூழலியல்:

கனிம வளங்களின் சுற்றுசூழலியல் தாக்கம், வனப் பகுதிகளின் சுற்றுசூழலியல் சிக்கல், வளங்களை மிகையாக சுரண்டுதல் போன்ற பாடங்கள் இந்த பகுதியில் படிக்க வேண்டும்.

வேளாண்மை சுற்றுசூழலியல் :

பசுமை புரட்சி மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து இங்கு குறிப்பிட வேண்டும்.
நீர் பாசன பிரச்சனைகள், நீர் மற்றும் நிலம், வேளாண் நில ஆக்கிரமிப்பு,

புதுப்பிக்கப்பட கூடிய வளங்கள்:

சோலார் எனர்ஜி , ஹைட்ரோ எனர்ஜி, டைடல் எனர்ஜி, விண்ட் எனர்ஜி, ஒடிஇசி, எரிபொருள குறிப்புகள், பசுமை நகரங்கள், இந்திய தொடக்கங்கள் பற்றி குறிக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுச்சூழலியல் தாக்க குறிப்புகள், நிலைத்த சுற்றுசூழலியல் வளர்ச்சி:

சுற்றுசூழலியல் குறிப்புகள், சுற்றுசூழலியல் வளங்கள், பொருளாதார முன்னேற்றம் நிலைத்த வேளாண்மை மற்றும் நிலைத்த தொழில் வளர்ச்சி, நீர் வள மேம்பாடு, 12வது ஐந்தாண்டு திட்டம், உலகத்தில் சுற்றுசூழலியல் மேம்பாடு போன்ற தலைப்புகளை படிங்க ஐஏஎஸ் முதன்மை தேர்வில் புவியியலுடன் இணைந்து அல்லது தனி தலைப்புகளாக கேள்விகள் கேட்கலாம்.

கேள்வி தொகுப்புகள்:

சந்தையில் கிடைக்கும் கேள்வி தொகுப்புகளை தொடர்ந்து படிக்க வேண்டும். அத்துடன் கடந்தாண்டு கேள்விகளின் தொகுப்புகள் படியுங்கள். ஆன்லைன் போட்டி தேர்வுகள் மற்றும் வினா விடை வங்கிகள் மூலம் இது தொரடர்பான அனைத்தும் கிடைக்க பெறலாம். தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு எளிதாகும்.

சார்ந்த பதிவுகள்:

ஐஏஎஸ் முதன்மை தேர்வில் அதிக கட் ஆப்கள் பெறும் வழிமுறை

English summary
The article tells about upsc prelims tips

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia