மாணவர்கள் தேர்வுக் கூடத்தில் செய்ய வேண்டியது செய்யக் கூடாதது

Posted By:

சென்னை : 2ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 இன்று தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 2434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆல் தி பெஸ்ட் மாணவர்களே.. நல்லா பரீட்சை எழுதுங்க!

1 தேர்வு நாள் அன்று காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும்,

சாப்பிடாமல் தேர்விற்குச் செல்லக் கூடாது. ஒருவேளை நீங்கள் சாப்பிடாமல் தேர்விற்குச் சென்றால் தேர்வு ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நீங்கள் சோர்வாகி விடுவீர்கள். அப்புறம் படித்தது எல்லாம் மறந்த விடும்.

2 மாணவர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

பதட்டத்தை தவிர்க்க வேண்டும். பதட்டமாக இருந்தீர்கள் என்றால் படித்தது மறப்பதோடு மட்டுமல்லாமல் அது தெரிந்த கேள்விகளையும் தவறாக எழுத வைத்து விடும். மேலும் எழுத்துப் பிழைகளை அதிகம் வரவழைத்து விடும்.

3 மன நிலையை சமநிலைப் படுத்த வேண்டும்.

தேர்விற்கு செல்லும் போது மனதை அலைபாய விடக் கூடாது. தேர்வு அறைக்குச் சென்ற உடன் சற்று நேரம் அமைதியாக இருந்து உங்கள் மனநிலையை சரி செய்ய வேண்டும். அப்படி சரிசெய்யாமல் அலைபாய்ந்த மனதுடன் இருந்தால் அது உங்களை குழப்பி விடும்.

4 பாயிண்ட் பாயிண்ட் ஆக எழுத வேண்டும்.

கேள்விகளுக்கான பதில்களை பத்தி பத்தியாக எழுதக் கூடாது. பாயிண்ட் பாயிண்ட்டாக எழுத வேண்டும். பாயிண்ட் பாயிண்ட் ஆக எழுதாமல் பத்தி பத்தியாக எழுதும் போது திருத்துபவர்களுக்கு கொஞ்சம் கடினமானதாக இருக்கும். எனவே பாயிண்ட் பாயிண்ட் ஆக விடைகளை எழுதுவது பார்ப்பதற்கும் திருத்துவதற்கும் எளிதாக இருக்கும். அது அதிக மதிப்பெண்களை பெற்றுத் தரும்.

5 கேள்விக்கான விடைகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுத வேண்டும்

கேள்விக்கான விடைகளை பக்கம் பக்கமாக சம்பந்தம் இல்லாமல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். என்னத் தேவையோ அதை மட்டும் தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுத வேண்டும். சில பேர் சிறிய வினாக்களுக்குக் கூட பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அப்படி எழுதும் போது அது உங்கள் நேரத்தை வீணாக்கி விடும். பின் பெரிய கேள்விகள் எழுதுவதற்கு போதுமான நேரம் இல்லாமல் போய்விடும். பெரிய கேள்விகளுக்கும் தேவையானவற்றை மட்டும் தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதும் போது முழு மதிப்பெண்கள் கிடைக்கும்.

English summary
do and donts for students. above mentiones little tips very use ful for all students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia