சென்னை பல்கலை. தொலைநிலை கல்வி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted By:

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் டிசம்பர் மாதத் தேர்வு எழுத விரும்புவோர், இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி தேதி என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை பல்கலை. தொலைநிலை கல்வி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இந்தக் கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைத் தேர்வில் பங்கேற்க அக்டோபர் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அபராதத் தொகையுடன் செலுத்த விரும்பும் மாணவ, மாணவிகள் அக்டோபர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

இவ்வாறு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Distance Education Department of University of Madras has extended the December exams date for applying. Students can apply for the exams up to October 5.,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia