நடப்பு நிகழ்வுகள் படியுங்க போட்டி தேர்வில் போட்டு உடைங்க !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு வருவதற்கான நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது. தேர்வர்கள் தொடர்ந்து படிக்க முனைப்போடு இருப்பீர்கள் அத்துடன் கேரியர் இந்தியா கல்வித்தளத்தின் நடப்பு நிகழ்வுகளின்  கேள்வியையும் நன்றாக படித்து கொள்ளுங்கள். 

போட்டி தேர்வுக்கு தேர்வர்களின் சிறந்த பங்கழிப்பை நல்க வேண்டும்

1 தமிழக வனத்துறை பழங்குடியினர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க என்ன திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கின்றது

விடை: புலிகுட்டிகள்

2 ஆற்காட்டு இளவரசாரன நவாப் முஹம்மது அப்துல் அலி தென்னிந்திய எந்த கல்வி கழகத்தில் தென்னிந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

விடை: இஸ்லாமி கல்வியியல் கழகம்

3 சவுனி திட்டம் என்றால் என்ன

விடை: குஜராத் மாநிலத்தில் வறட்சியான சவுராஷ்டிரா பகுதி நர்மதா நதிநீர் மூலம் பாசன வசதி பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது

4 தேசிய ஊட்டச் சத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் ஏது

விடை: நிதி ஆயோக்

5 இந்தியா- அமெரிக்கா இடையே நடைபெறும் மிகபெரிய கூட்டு இராணுவ பயிற்சி மற்றும் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு நிகழ்ச்சி எது

விடை: யூத் அபியாஸ்

6 இந்தியாவில் செயலபடும் நவரத்தின நிறுவனங்களில் தரம் உயர்ந்த நிறுவனத்தின் பெயர் என்ன

விடை: பாரத் பெட்ரோலியம் 8வது அமைப்பாக தரம் உயர்வு

7 இந்தியா இலங்கை இடையே கூட்டு பயிற்சி 7வது பதிப்பு பெயர் என்ன

விடை: சிலிநெக்ஸ் வங்காள விரிகுடாவில் நடை பெற்றது

8 இந்தியாவில் 50 ஆண்டுகள் தங்கியுள்ள எந்த பழங்குடியினருக்கு குடியுரிமை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது

விடை: சக்மா, ஹஜோங்

9 நாட்டின் மிகப்பெரிய அணையான சர்தார் சரோவார் அணை எந்த நதியின் மீதுள்ளது

விடை: நர்மதா

10கூகுள் நிறுவனம் இந்திய மக்களின் பணபரிவர்த்தனைக்காக உருவாக்கியுள்ள செயலி பெயர் யாது

விடை: தேஜ்

சாந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கச்சிதமாக படியுங்கள் கனவை அடையுங்கள் 

போட்டி தேர்வு கேள்விகளை நன்றாக படித்தலுடன் ரிவைஸ் செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க

நடப்பு நிகழ்வுகள் கரைக்கட்டா படிங்கப்பா பாஸ் ஆகலாம் !!

English summary
here article tell about tnpsc current events

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia