டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற படிக்கவும்

Posted By:

போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளை குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும் . நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்வோம் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 தமிழகத்தில் காவிரி புஷ்கரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்

விடை: 144 ஆண்டுகள், 2017 நடப்பு ஆண்டில் செப்டம்பர் 12 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது .

2 தமிழக கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் பாடவேண்டும் என தெரிவித்த அமைப்பு

விடை: சென்னை ஐகோர்ட்

3 இந்தியாவின் முதல் இரயில் பேரிடர் மேலாண்மை மையம் எங்கு அமையவுள்ளது

விடை: பெங்களூர் நகரில்

4 தமிழகத்தில் அம்மா உணவகம் போல் கர்நாடகாவில் அமைந்துள்ள உணவகத்தின் பெயர்

விடை: இந்திரா உணவகம்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கான நடப்புநிகழ்வுகள்

5 கோவை பெங்களூர் இடையே இரண்டடுக்கு டபுள் டெக்கர் கொண்ட இயக்கப்படும் இரயிலின் பெயர் என்ன

விடை: உதய் எக்ஸ்பிரஸ்

6 சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தை உருவாக்கியது யார்

விடை: திரைப்பட இயக்குநர் கோவிந்த் நிகலாணி

7 கஜ் யாத்திரா எனப்படும் நாடு தழுவிய திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்   

விடை: மத்திய சுற்றுசூழல் காடுகள் துறை அமைச்சர்  ஹர்ஸ்வர்த்தன்

8 இந்தியாவின் முதல் தனியார் ஆயுதம் தயாரிக்கும் ஆலை எங்கு துவங்கப்பட்டுள்ளது

விடை: ஹைதிராபாத்தில்

9 நாட்டிலுள்ள விவசாய தயாரிப்புகளை ஆன்லைன் வழியாக விற்பனை செய்வதற்காக துவங்கப்பட்டுள்ள இணையதள சேவை

விடை: e-RaKAM

10 மதமாற்ற சுதந்திர மசோதா 2017 என்ற பெயரில் மதமாற்ற தடைச்சட்டத்தை எந்த அரசு நிறைவேற்றியுள்ளது

விடை: ஜார்கண்ட்

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகளில் முழுமதிபெண்கள் முழுமையாக படிக்கவும் !! 

போட்டிதேர்வில் வெல்ல நடப்பு கேள்வி பதில்களை படிக்கவும்

English summary
here article tell about tnpsc current affairs question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia