டின்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருங்களா போட்டி தேர்வர்களே போட்டி தேர்வில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றிர்கள் என்பதை அறிவோம். படிப்பதுடன் சரியான நேரத்தில் தேர்வுக்கான விண்ணப்பதை செலுத்த வேண்டும். குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்தை செலுத்த டிசம்பர் 13 இறுதி நாளாகும் ஆகையால் இறுதி தேதிக்குள் விண்ணப்பத்தை செலுத்துவதை மறக்க வேண்டாம்.

1 செங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்தற்காக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குருசேத்ரா பட்டம் பெற்ற மாணவி பெயர் என்ன
விடை: இரா.ஆர்த்தி
2 இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சுற்றுசூழல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது
விடை: முதல் முறையாக தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பூர் கேரேஜ் வேகன் பணிமனை
3 இரயில்வே பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசு ஒப்பந்தம் செய்த நாடு
விடை: ஜப்பான்
4 இந்திய கடற்படையினால் அமைக்கப்பட்டுள்ள , ஒருங்கினைந்த நீருக்கடியிலான துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைமை துவங்கப்பட்டுள்ள நகரம்
விடை: மும்பை
5 இ- காபினெட் முறையை முதன் முதலில் அமல்படுத்தியுள்ள வடகிழக்கு மாநிலம்
விடை: அருணாச்சல பிரதேசம்
6 பள்ளிப் பொது தேர்வு விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினம் எனும் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ள அரசு
விடை: பீகார் அரசு
7 அரசு ஊழியர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த தடை விதுத்துள்ள மாநிலம்
விடை: பீகார்
8 உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பில் சர்வதேச அளவில் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்
விடை: முதலிடம்
9 பாலின விகிதத்தை ஆன்லைன் முறையில் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பத்தை பானிபட் நகரில் அறிமுகப்படுத்திய அரசு எது
விடை: ஹரியானா மாநில அரசு
10 இந்தியாவிற்கு கிரப்பன வகை போர் விமானங்களை ஏற்றுமதி செய்யவுள்ள நாடு எது
விடை: ஸ்வீடன்
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












