டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்புகள் எந்த நேரத்திலும் வரலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது . டிஎன்பிஎஸ்சியில் கேள்வி பதில்களை நன்றாக படிக்க வேண்டிய நடப்பு நிகழ்வுகளின் பதிவை இங்கு இணைத்துள்ளோம் நன்றாக படியுங்கள் போட்டி தேர்வு என்பது எளிதானது ஆனால் மாய ஜாலங்கள் நிறைந்தது தொடர்ந்து படிப்பவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள் . படிப்பதுடன் தேர்வர்கள் ரிவைஸ் செய்ய வேண்டும் . ரிவைஸ் செய்வதில் பல வகைகள் உண்டு அவற்றை சரியாக பின்ப்பற்றி படிப்பவர்களே வெற்றி பெறுவது எளிதாக இருக்கின்றது . மற்றவர்கள் அவ்வழியை அறிந்து கொள்ள வேண்டும்.

1 நாட்டின் முதல் திருநங்கை உதவி ஆய்வாலராக தேர்வு பெற்றவர் பெயர் என்ன
விடை: பிரித்திகா யாஷினி ( சேலம்)
2 சமிபத்தில் தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலராக தேர்வு பெற்ற திருநங்கலை பெயர் என்ன
விடை: நஸ்ரியா (இராமநாதபுரம்)
3 எந்த அரசு பள்ளிக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது எதற்காக வழங்கப்பட்டது
விடை : பழநி அரசு பள்ளி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்
4 இந்தியாவில் முதன் முதலாக யானைகளுக்கான விலங்குகள் ஆம்புலன் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்
விடை: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
5 எதற்காக மாணவர்களுக்கு ஒயிட்னர் விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது
விடை: ஒயிட்னரில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் ஆல்ஹால் உள்ளது
6 கொசுக்களை ஒழிக்க தமிழகத்தில் சமிபத்தில் அறிமுகப்படுத்த திட்டம்
விடை: ஆயில் உருண்டை வீசும் திட்டம் வேலூர் மாநகராட்சி முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது
7 தனிநபர்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாப்பது குறித்து அடிப்படை உரிமைகளுள் ஒன்று என எப்போது உச்சநீதிமன்றம் அறிவித்தது
விடை: 24/8/2017
8 சங்கல்ப் ஷே சித்தி என்ற மத்திய அரசு அறிவிப்பின் நோக்கம் என்ன மற்றும் அந்த அறிவிப்பு என்று அறிவிக்கப்பட்டது
விடை: வெள்ளையனே வெளியேறு இயக்க 75வது ஆண்டு தினமான ஆக்ஸ்ட் 8 ஆம் நாள் சங்கல்ப் ஷே சித்தி அறிவிக்கப்பட்டது . புதிய இந்தியாவை படைப்பதற்காகவே அறிவிக்கப்பட்டது
9 எட்டாவது புதுப்பிக்கட்ட ஆற்றல் தொழில்நுட்ப கூடுகை கண்காட்சி என்று நடத்தப்பட்டது
விடை: ஆக்ஸ்ட் 21 முதல் 23 வரை புது டெல்லியில் நடத்தப்பட்டது
10 இஸ்லாம் மதத்தின் முத்தல்லாக் இந்திய அரசியலைமைப்பின் படி எந்த விதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது
விடை: சரத்து 14 சட்டத்தின் முன் சமத்துவம்
சரத்து 21 உயிருக்கும் தனிபட்ட சுதந்திரந்திர்க்கும் பாதுகாப்பு
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












