போட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவரும் படிக்க நடப்பு நிகழ்வுகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோரே அடுத்தடுத்து தேர்வு வரும் என்ற தகவல் நாம் அறிந்ததே ஆகையால் தேர்வுக்கு தயாராக வேண்டும். தினமும் என்ன படிக்கிறோமோ அந்த அட்டவணையை முறையாக தயாரிக்க வேண்டும் . அந்த அட்டவணையுடன் நாம் தொடர்ந்து செய்ய வேண்டியது என்னவெனில் நடப்பு நிகழ்வுகள் மற்றும் கடந்த வருட வினாவங்கியை நாம் தொடர்ந்து படிக்க வேண்டும் . ஒட்டு மொத்தமாக படிப்பது சிரமம் ஆனால் ஒருசில தொகுப்புகளாக படிக்கலாம் .

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை தினமும் படிக்க வேண்டும்

1 சேதுபாரத திட்டம் என்றால் என்ன

விடை: இந்தியாவில் 2019 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள ரயில்வே லெவல் கிராஸிங்கை நீக்க உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.

2 இந்திய இராணுவத்திற்கு தீவிரவாதிகள் ஊடுருவலை கண்டறிய உதவும் வகையில் டிஆர்டிஒ நிறுவனம் உருவாக்கிய புதியவகை ரேடார் பெயர் என்ன

விடை:திவ்யசக்சூ தடை அரண் ஊடுரு தேற்றுருவ ரேடார்

3 எக்ஸைஸ் ஃபோர்ஸ் 18 என்றால் என்ன

விடை: இந்தியா உள்ளிட்ட ஆசியான் ப்ளஸ் நாடுகளின் பன்னாட்டு கள போர்பயிற்சி

4 இந்திய வரலாற்றிலேயே இந்திய மண்ணில் நடைபெற்ற மிகப்பெரிய தரைப்படை போர் பயிற்சி எது

விடை: எக்ஸைஸ் ஃபோர்ஸ் 18

5 மியான்மர் நாட்டின் முதல் தேர்ந்தெடுங்கப்பட்ட அதிபர்

விடை: யூ கதின் கியாவ்

6 இந்தியாவின் கடற்படைத்தளபதியார்

விடை: சுனில் லன்யா

7 சுனில் லன்யா இந்தியாவின் எத்தனையாவது கடற்படைத் தலைவர் ஆவார்

விடை: 25 ஆவது தலைவர்

8 ஊசிமூலம் செலுத்தக்கூடிய கருத்தடை மருந்தை அறிமுகப்படுத்திய நாட்டில் முதல் மாநிலம்

விடை: ஹரியானா

9 இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்

விடை: அந்தோணி லியான்ஸூ

10 இஸ்ரேல் சுதந்திரதின விழாவில் ஒளி ஜோதியை ஏற்றிய பார்வையற்ற இளைஞர் எந்த நாட்டை சேர்ந்தவர்

விடை: இந்தியா (டினா சிமாடா )

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2ஏ தேர்வுக்கான விடைத்தாள் கீ வெளியீடு !! 

குரூப் 2ஏ போட்டி தேர்வுகள் முடிந்தாகிவிட்டது விடைகள் கட் ஆஃப் என்னவாக இருக்கும்

? டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நல்லா படிங்க

English summary
here article mentioned current affairs question practices

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia