மத்திய அரசு நடத்தும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் பெற /exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2024-25) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 27-ல் தொடங்கி மார்ச் 26-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து விண்ணப்பத் தேதியை நீட்டிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விருப்பம் உள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளம் வழியாக மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து விண்ணப்பங்களில் ஏப்ரல் 2, 3-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிரமம் இருந்தால் 011- 40759000 /69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஹால்டிக்கெட் மே 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












