பொது சட்ட சேர்க்கை தேர்வுக்கு கிராக்கி: 45 ஆயிரம் மாணவர்கள் பதிவு!!

Posted By:

டெல்லி: பொது சட்ட சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு (சிஎல்ஏடி) 45 ஆயிரம்மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில்இந்த ஆண்டுதான் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு அதிக அளவில் விண்ணப்பங்களைப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு நடத்தும் இந்த ஆன்-லைன் சட்ட நுழைவுத் தேர்வுக்குஆண்டுதோறும் மாணவர்கள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 9ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் 45,040 மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (என்எல்யு) சட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

பொது சட்ட சேர்க்கை தேர்வுக்கு கிராக்கி: 45 ஆயிரம் மாணவர்கள் பதிவு!!

இந்தத் தேர்வு இந்த ஆண்டு நாடு முழுவது 170 மையங்களில் மே 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு தேர்வை பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (ஆர்ஜிஎன்யூஎல்) நட்ததவுள்ளது. இதுகுறித்து ராஜீவ் காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் பரம்ஜித் ஜஸ்வால் கூறியதாவது: இந்த ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். ஆன்-லைன் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 170 மையங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எந்த மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்ற விவரங்கள் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

English summary
Common Law Admission Test (CLAT) 2016 has received about 45,040 applications, breaking the records of the last nine years. Aspirants across twenty cities in the country have applied for the exam. However, the whooping raise in application marks the highest recorded number received for the centralised online law entrance exam, which will be conducted on May 8 across an estimated 170 centers. It is said that last year 39,686 aspirants had applied for the exam. Common Law Admission Test (CLAT) has been the gateway for candidates who are aspiring to take admission in to any one of the seventeen coveted National Law Universities (NLUs).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia