பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வுகள்: குர்காவ்ன் இரட்டையர் சாதனை...!!

Posted By:

டெல்லி: பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் குர்காவ்னைச் சேர்ந்த இரட்டையர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சிபிஎஸ்இ தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது இயல்பான விஷயம்தான் என்றாலும் ஒரு இரட்டையர், அதுவும் ஒரே அளவில் மதிப்பெண்களை அதிக அளவில் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா, ஹர்ஷிதா சௌஹான் ஆகியோர் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் தலா 93 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குர்காவ்ன் டிஏவி பப்ளிக் பள்ளியில் படித்து வருகின்றனர்.

பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வுகள்: குர்காவ்ன் இரட்டையர் சாதனை...!!

ஹர்ஷியா ஆங்கிலத்தில் 87, வேதியலில் 93, கணிதத்தில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அங்கிதா ஆங்கிலத்தில் 93, வேதியலில் 95, கணிதத்தில் 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். உடற்கல்வி, இயற்பியல் பாடத்தில் இருவரும் தலா 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இருவருமே ஐஐடி ஜேஇஇ மெயின் தேர்வை எழுதி மதிப்பெண் பெற்றனர். ஆனால் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற முடியாததால் தற்போது சென்னையிலுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேரவுள்ளனர். இவரது தந்தை சௌஹான் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

English summary
When the Class XII CBSE results were announced Saturday morning, twins Ankita and Harshita Chauhan found another identical feature — both had scored 93 per cent. “We cannot get over the fact that our results are the same. Our parents can’t believe it either,” said Ankita. The sisters have been alike in almost everything they do, said their parents. “Ankita worked very hard and was expecting a higher score than me in the board examinations but our father said we would score equally. When we opened the result, we were shocked to see he was right,” said Harshita. The girls studied at DAV Public School, Sector 14. Both scored 95 in Physics and Physical Education. While Harshita scored 87 in English, 93 in Chemistry and 95 in Maths, Ankita scored 93, 95 and 87 respectively. engineer.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia