தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 309 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் www.tnusrbonline.org என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வின் தகுதி மதிப்பெண்கள், அடுத்தகட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், அசல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றில் தகுதிவாய்ந்தவர்களின் சேர்க்கை எண்கள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
உடற்கூறு அளத்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
English summary
Check your Tamil Nadu TNUSRB Result now!
Story first published: Friday, November 2, 2018, 11:00 [IST]


Click it and Unblock the Notifications












