TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு!

சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் எதிர்கால திட்டம் குறித்தும், திறனறியும் வகையில் தமன்னா என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் எதிர்கால திட்டம் குறித்தும், திறனறியும் வகையில் தமன்னா என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது "Try And Measure Aptitude And Natural Abilities" என்பதன் சுருக்கமே தமன்னா (TAMANNA) தேர்வு ஆகும்.

TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு!

பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி துறையைத் தேர்வு செய்யும் வகையில் மாணவர்கள் தங்களது திறன்களை அறியும் விதமாக சிபிஎஸ்இ சார்பில் தமன்னா என்னும் தேர்வு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) இணைந்து செயல்படுத்தியுள்ள இத்தேர்விற்கு Try And Measure Aptitude And Natural Abilities என பெயரிட்டுள்ளனர். இதன் சுருக்கமே தமன்னா (Tamanna) என்பதாகும்.

இத்தேர்வானது வாய்மொழித் திறன், மொழித்திறன் என மொத்தம் 7 தலைப்புகளில் சுமார் 70 நிமிடங்களுக்கு நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கு என தனியாக புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமன்னா தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்களது திறனை அறிந்து, அதற்கேற்ப உயர்கல்வித் துறையைத் தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும், இத்தேர்வில் வெற்றி, தோல்வி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனவும் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். அதுமட்டுமின்றி மாணவர்கள் விருப்பப்பட்டார் மட்டும் இத்தேர்வில் பங்கேற்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE, NCERT to launch 'Tamanna' aptitude test for students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X