மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்

Posted By:

டெல்லி: மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன வழக்கில் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேசிய முதல் நிலை மருத்துவ நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானது.

எனவே தேர்வு முடிவை வெளியிடக் கூடாது என ஹரியானா மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கில் வருகிற 15 ஆம் தேதி திங்கள்கிழமையன்று தீர்ப்பளிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்தது. அதுவரை தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court has deferred the decision on the All-India Pre-Medical Test for admission to the MBBS course, which had been marred by a paper leak. The court will decide on June 15 whether a reexamination will be held.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia