சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 97.32 % மாணவர்கள் தேர்ச்சி

Posted By:

சென்னை: சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 97.32 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில்சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். சென்னை மண்டலத்தில் 1.7 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 97.32 % மாணவர்கள் தேர்ச்சி

இத்தேர்வின் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. 97.32 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனார். திருவனந்தபுரம் 99.77 சதவீதம் பெற்று மண்டல அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, cbse,nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

English summary
CBSE Class 10 Result 2015 declared on and cbseresults.nic.in , cbse.nic.in by 2 pm on Thursday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia