சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் ஒன்று அல்லது 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 1 அல்லது 2 பாடங்களில் தோல்வியடையும் பட்சத்தில் அவர்களுக்குத் தனியே கம்பார்ட்மெண்ட் எனும் மறுதேர்வு நடத்தப்படும்.
அவ்வாறு நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான கம்பார்ட்மெண்ட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது மறுதேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்னும் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
For Quick Alerts
For Daily Alerts