சமூக அறிவியல் வினாத்தாளில் குழப்பம்...!! சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி...!!

Posted By:

புதுடெல்லி: சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வின் வினாத்தாளில் குழப்பம் ஏற்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக அறிவியல் வினாத்தாளில் வந்த கேள்வியே மீண்டும் இடம்பெற்றிருந்ததால் மாணவர்கள் குழம்பிவிட்டன.

சமூக அறிவியல் வினாத்தாளில் குழப்பம்...!! சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி...!!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றபோது வினாத்தாளில் 3 மதிப்பெண்களுக்கான கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதில் இரு முறையே ஒரே கேள்வியே இடம்பெற்றிருந்தது. இதனால் மாணவர்கள் குழம்பிவிட்டன. கேள்வி எண் 9-ம், கேள்வி எண் 20-ம் ஒரே கேள்வியே.

இதனால் ஏற்பட்ட குழப்பத்துக்கு சிபிஎஸ்இ நிர்வாகத்தார் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது அந்தக் கேள்விக்கான விடையை எழுதியிருந்தாலே மாணவர்களுக்கு கூடுதலாக 3 போனஸ் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.

இது கேள்வித்தாள் தயாரிக்கும்போது நடந்த தவறு. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். இதை மன்னிக்க முடியாது. இருப்பினும் தவறு நடந்துவிட்டது. அதை நாம்தான் சரிசெய்யவேண்டும். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்று பள்ளிகளுக்கு பெற்றோரும், மாணவர்களும் இ-மெயிலில் புகார் அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CBSE Class 10 boards, this time has grabbed headlines for disheartening students, who appeared for social science board exam paper. The subject paper had 3 mark question, which got repeated twice and left students in lurch. The exam was conducted on held on March 10. As per TOI reports, schools said that since neither of the question was optional, students wrote the answer could easily obtain bonus three marks. However, for students who didn't know the answer, it would mean a six mark loss for them instead of three. A school principal said, "Set number 3 of the Social Science paper sprung a huge surprise. Question Nos 9 and 20 were the same, word for word. It was literally a copy and paste job. It is very surprising that such an error went unnoticed by the authorities."

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia