CBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயன்படுத்திக்கலாம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களில் கற்றல் குறைபாட்டுடன் சிறப்புத் தேவை உள்ள மாணவர்கள் இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிக

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களில் கற்றல் குறைபாட்டுடன் சிறப்புத் தேவை உள்ள மாணவர்கள் இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

CBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயன்படுத்திக்கலாம்!

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யாம் பரத்வாஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

CBSE பள்ளிகளில் படித்துவரும் சிறப்புத் தேவை உள்ள மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நடப்பு கல்வியாண்டு முதல் கால்குலேட்டா்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதிக் கடிதம் அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பிராந்திய சிபிஎஸ்இ அலுவலகத்துக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். உரிய அனுமதி பெறாத மாணவர்களுக்கு கால்குலேட்டா்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE Board Exam 2020: Children with Special Needs allowed use of calculators during Board Exams
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X