சிபிஎஸ்இ பொதுத் தேர்வு.. உங்க பெயர் இருக்கான்னு "செக்" பண்ணிட்டீங்களா?

Posted By:

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் பெயர்ப் பட்டியலை சிஎஸ்இ போர்டு வெளியிட்டுள்ளது.

இணையதளத்தில் போய் இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

எப்படி பார்ப்பது?

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு.. உங்க பெயர் இருக்கான்னு

சிபிஎஸ்இயின் cbse.nic.in இணையதளத்துக்குப் போங்கள்.

அங்கு வலது ஓரம் உள்ள 'Admit Card/LOC/Centre Material for Board Exam 2017 (School login for Regular Candidates)' என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

உள்ளே சென்றதும் உங்களது ஐடி, பாஸ்வேர்ட், செக்யூரிட்டி பின் எண்ணைக் கொடுக்கவும்.

இப்போது லிஸ்ட் ஸ்கிரீனில் தெரியும். இதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறும். பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 9ல் தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி வரை நடைபெறும்.

தனியார் தேர்வர்களுக்கான அட்மிட் கார்டுகள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டு விட்டன.

English summary
Central board of secondary education department has released 10 and 12 public exam candidates online name list.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia