CBSE 10th Result 2021: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஆக.,3) வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் முறை அறிவிக்கப்பட்டது.

CBSE 10th Result 2021: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

அதன்படி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலை 30-ம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

முன்னதாக, இத்தேர்விற்கு 20,97,128 பேர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், 20,76,997 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 99.4 சதவிகிதமாக உள்ளது. மேலும், 16,639 பேரின் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, cbse.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் பள்ளிகளில் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE 10th Result 2021: CBSE Class 10th Result 2021 To Be Announced today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+