கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வையும் மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் பொதுத் தேர்வில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவிகிதம் 12ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவிகிதம் என 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படுகிறது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளின் வாயிலாகவோ அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












