சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது !

Posted By:

சென்னை : நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் சிபிஎஸ்இ தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 8லட்சத்து 86 ஆயிரத்து 506 மாணவ மாணவியர்கள் எழுதுகிறார்கள். இதற்காக 16ஆயிரத்து 363 தேர்வு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது !

12ம் வகுப்பு பொதுத் தேர்வினை 10லட்சத்து 98 ஆயிரத்து 981 மாணவ மாணவியர்கள் எழுதுகிறார்கள். இதற்காக 10ஆயிரத்து 678 தேர்வு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தேர்வு மையத்தின் முகவரியை அறிந்து கொள்வதற்கு வசதியாக சிபிஎஸ்இ மொபைல் ஆப் வசதியினை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் உடல் நலம் சரியில்லாத மாணவ மாணவியர்கள் தேர்விற்கு இடையில் உணவு அருந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் சிபிஎஸ்இ தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

English summary
cbse 10th & 12th std exam today. 10th exam 886506 students and 12th exam 1098981 students write examination across India.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia