சிபிஎஸ்இ.யின் கீழ் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு இன்று முதல் (சனிக்கிழமை) தொடங்கியுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே, மாணவர்களில் உயர்கல்வித் தேவைக்காக பொதுத்தோ்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க சிபிஎஸ்இ கடந்த ஆண்டு முடிவு செய்தது.
அதன்படி, 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு இன்று (பிப்ரவரி 15) தொடங்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்புக்கு மாா்ச் 20-ஆம் தேதி வரையும், 12ம் வகுப்பிற்கான தேர்வு மாா்ச் 30-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தோ்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தேர்வுத்துறையினர் தெரிவித்தனர்.
For Quick Alerts
For Daily Alerts