தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள்: நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர்

Posted By:

சென்னை, மார்ச் 2: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் 46 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள்: நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வும், 12ம் வகுப்பு தேர்வும் இன்று ஒரே நாளில் தொடங்கியதுது. 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 20ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் மட்டும் 16 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு 26ம் தேதி முடிகிறது. இந்த தேர்வில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுவதாக சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநர் சுதர்ஷன்ராவ் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள்: நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர்

சென்னை மண்டலத்தில் அடங்கிய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, அந்தமான், உள்ளிட்ட பகுதிகளில் 12ம் வகுப்பு தேர்வை 70 பேரும், 10ம் வகுப்பு தேர்வை 1 லட்சத்து 70ம் பேரும் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் 3537 தேர்வு மையங்களில் 13,73,853 பேர் 10ம் வகுப்பு தேர்விலும், 3164 தேர்வு மையங்களில் 12ம் வகுப்பு தேர்வில் 10,40,368 பேரும் இன்று தேர்வில் பங்கேற்றனர்.

மாணவ மாணவியர் தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மைய வளாகத்துக்குள் வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தேர்வுக்கான எழுது பொருட்கள் அனைத்தும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.

தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள்: நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர்

அத்துடன் தேர்வுகளை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள், பறக்கும் படைகள் ஆகியவற்றை சிபிஎஸ்இ அமைத்திருந்தது. கேள்வித்தாள் கட்டுகள் அனைத்தும் 4 உதவி கண்காணிப்பாளர்கள் முன்னிலையில்தான் பிரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள்: நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர்

பார்வையற்ற மாணவர்கள் 391, கற்றலில் குறைபாடு உடையவர்கள் 988, காதுகேளாதோர், வாய் பேச இயலாதோர் 225, உடல் ஊனமுற்றோர் 904, மனவளர்ச்சி குன்றியோர் 147 பேர் 10ம் தேர்வில் பங்கேற்கின்றனர். 12ம் வகுப்பு தேர்வில் பார்வையற்ற 363 பேர் உள்பட மொத்தம் 2066 பேர் பங்கேற்கின்றனர்.

மேற்கண்ட மாற்றுத் திறன்கொண்ட மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக கூடுதலாக 1 மணி நேரத்தை சிபிஎஸ்இ அனுமதித்துள்ளது.

English summary
The CBSC govt examinations begins today nationwide.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia