"கேட்" தேர்வுக்கான தகுதிகளைத் தெரிஞ்சுக்கங்களேன்!

Posted By:

சென்னை : காமன் அட்மிஷன் தேர்வு எனப்படும் சிஏடி தேர்வு தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். சிஏடி தேர்வு (ஐஐஎம்) இந்திய மேலாண்மை கழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பில் (முதுகலை) சேருவதற்காக நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வினை (ஐஐஎம்) இந்திய மேலாண்மை கழகம் நடத்துகிறது. சி.ஏ.டித் தேர்வு 2017 டிசம்பர் மாதம் நடைபெறும் என ஐஐஎம் தெரிவித்துள்ளது.

சி.ஏ.டி தேர்விற்கான தகுதிகள் -

இளநிலை பட்டம் அதற்குச் சமமான கல்வித் தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிஎஸ்சி போன்ற இளநிலை பட்டம் பெற்றவர்கள் மேல்படிப்பில் சேருவதற்காக சி.ஏ.டி தேர்வினை எழுதுகிறார்கள். மனிதவளத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். இது பல்வேறு ஐஐஎம் நிறுவனங்களால் சுழற்சி முறையில் நடத்தப்படும் தேர்வாகும்.

பொதுப் பட்டியலைச் சார்ந்தவர்கள் 50% மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45% மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2017ம் இளநிலைக் கல்விக்கான இறுதித் தேர்வினை எழுதுபவர்களும் சி.ஏ.டி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 30 ஜீன் 2017ம் தேதிக்குள் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு முன் நன்கு சரிப்பார்த்து விட்டு சமர்ப்பிக்கவும். ஏனென்றால் நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதேனும் தவறு இருந்தால் ஐஐஎம் அதனை நிராகரித்துவிடும்.

சி.ஏ.டி தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படும் முறை -

காமன் அட்மிஷன் தேர்வு எனப்படும் சிஏடி தேர்வு தேசிய அளவில் நடத்தப்படும். இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. சிஏடி தேர்வு (ஐஐஎம்) இந்திய மேலாண்மை கழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல முன்னணி கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பில் (முதுகலை) சேருவதற்காக நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வினை (ஐஐஎம்) இந்திய மேலாண்மை கழகம் 2017 டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐஐஎம் மற்றும் பல முன்னணி கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பில் சேருவதற்காக இந்த சி.ஏ.டி தேர்வு நடத்தப்படுகிறது. பொதுப் பட்டியலைச் சார்ந்தவர்களில் 50% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி,மாற்றுத் திறனாளிகளில் 45% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வில் பெறும் மார்க்குகள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகத்தராம் வாய்ந்த ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.

மாணவர்கள் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். திறன் தேர்வில் அவரவர் பெறும் மார்க் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.ஒவ்வொரு ஐஐஎம் நிறுவனத்திலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல் முறை மற்றும் கட் ஆப் மார்க்குகள் வேறுபட்டுக் காண்ப்படும்.

ஐஐஎம் நிறுவனத்தால் நடத்தப்படும் சி.ஏ.டி தேர்வில் வெற்றி பெற்று அடுத்தக் கட்ட நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் அந்தந்த ஐஐஎம் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் அவர்களுக்கு கடிதம் மூலமும விபரங்கள் தெரிவிக்கப்படும்.

சி.ஏ.டி. தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கான தரவரிசைப்பட்டியலும் பொதுப்பட்டியல் மற்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை அடிப்படையில் வெளியிடப்படும்.

சி.ஏ.டி தேர்வில் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் கீழே உள்ளது.

எஸ்டி பிரிவினருக்கு 7.5%, எஸ்சி பிரிவினருக்கு 15%, ஓபிசி பிரிவினருக்கு 27%, மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சி.ஏ.டி தேர்வினை பற்றி மேலும் அறிந்து கொள்ள www.iimcat.ac.in என்ற இணையதளத்தை அனுகவும்.

English summary
Candidates must know the eligibility criteria and educational qualifications to appear for Common Admission Test (CAT) entrance examination. CAT 2015 is the national level entrance examination which is conducted for admission to management programmes in IIMs and B-Schools across the country.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia