எம்பிஏ உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கேட் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம். அதன்படி, நடப்பு ஆண்டு கோழிக்கோடு ஐஏஎம் சார்பில் கேட் (CAT) தேர்வு நவம்பர் 24ம் தேதியன்று நடைபெற்றது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கேள்வித்தாள்கள் எளிதாக இருந்தாக கூறப்பட்ட நிலையில் சுமார் 30 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வில் பங்கேற்கவில்லை.

ஐஏஎம் சார்பில் கேட் (CAT) தேர்வு நவம்பர் 24ம் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்விற்காக 2,44,169 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 34,253 விண்ணப்பதாரர்கள் பங்கேற்கவில்லை என ஐஏஎம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கேட் தேர்வு
காலை 9 மணி முதல் 12 மணி வரையில் முதல் தாள் (ஒரு பகுதி) தேர்வும், 2.30 மணி முதல் 5.30 வரையில் இரண்டாம் தாளும் நடைபெற்றது. நாடு முழுவதும் 376 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் தமிழகத்தில் எவ்வித குழறுபடிகளும் இன்றி நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












