போட்டி தேர்வுக்கான களத்தை வெல்ல நடப்பு நிகழ்வுகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை படிப்பது ஒருப்பக்கம் தேர்வுக்கான சொந்தமாக கேள்விகளை உருவாக்குவது ஒரு பக்கம் என பல்வேறு கோணங்களில் படிப்புகள் போய் கொண்டிருக்கும் தேர்வர்களே உங்களுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். உங்களுக்கான ஒரு முயற்சியாக கேள்விகளை நாங்களே தயாரித்து கொடுக்கின்றோம்.
படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்.

நடப்பு நிகழ்வுகள் படிங்க தேர்வை வெல்லுங்க

1 இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பு கொண்ட மாநிலங்கள்

விடை: உத்திர பிரதேசம், தமிழ்நாடு , ஜார்க் கண்ட், மகாராஷ்டிரா

2 இந்தியாவிலேயே குறைந்த வாக்கு மதிப்பு கொண்ட மாநிலம்

விடை: சிக்கிம்

3 நாடு முழுவதும் சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை

விடை: 4120

4 இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்ட மிக அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் எனில் எது அது

விடை: ஜிசாட்17, 3477 கிலோ எடை கொண்டது

5 இஸ்ரோவினால் தன் சொந்த முயற்சியினால் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராகெட் மூலம் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட அதிக எடைகொண்ட செயற்கைக் கோள் எது

விடை: ஜிசாட் 9 ஆகும்

6 உலகின் மிக இலகுவான மற்றும் சிறிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட நாள் எது

விடை: ஜூன் 22, 2017

7 உலகின் மிக இலகுவான சிறிய செயற்கைகோள் தயாரிக்கப்பட்டத் யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் பெயர் என்ன

விடை: முஹம்மது ரிஃபாத் ஷாருக் தமிழக பள்ளி மாணவர் தலைமையில் கலாம் சாட் எனப் பெயரிடப்பட்டு ஏவப்பட்டது

8 காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டை சிறப்பிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள்

விடை: காந்தி தர்ஷன் இரயில்

9 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மே 2 2017இல் ஆரம்பித்த புதிய பிரச்சார இயக்கத்தின் பெயர் என்ன

விடை: வித்யா வீர்தா அபியான்

10 சம்பத் என்னும் திட்டத்தின் நோக்கம் என்ன

விடை: மத்திய உணவு பதப்படுத்துதல், வேளாண் துறையின்வருவாய்க்கு உதவுதல், வேளாண் கழிவை விளைச்சலுக்கு கொண்டு செல்லுதல் போன்ற முன்னேற்றங்களுக்காக உருவாக்கப்பட்டது

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும்

நடப்பு நிகழ்வுகள் சரியாக படித்து பொதுஅறிவு பாடத்தை கடந்து வெல்லலாம் தேர்வில் !

English summary
here article tell about tnsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia