ஸ்டேட்போர்டு எக்ஸாம் நாளை மறுநாள் தேர்வுக்கு ரெடியா மாணவர்களே !

Posted By:

மார்ச் 1 முதல் தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வு தொடங்குகின்றது. மார்ச் தொடக்கம் முதல் தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் நாடு ழுவழுவதும் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளிலும் பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.

பொதுத் தேர்வு:

பொது தேர்வுக்கான காலம் வெகு அருகில் இருக்கின்றன மாணவர்களே தேர்வுக்கு தயாராகி கொண்ரிருக்கின்றிர்களா, தேர்வு நேரத்தில் எந்த வித மன உலைச்சலுக்கும் இடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மனதை ரிலாக்ஸா வச்சு படிங்க நல்லா தூங்கி எழவும்.

தேவையற்ற குழப்பங்களை விடுங்க மனசுக்குள்ள உங்களுக்கான மதிபெண்கள் இலக்கினை உறுதியோடு சொல்லிகொள்ளுங்கள் நிச்சயம் அதிகமதிபெண்கள் கிடைக்கும்.

தேர்வுக்கு வெகு அருகில் இருக்கின்றீர்கள் மனதை அமைதி படுத்துங்கள் உங்களுக்குள் பாஸ்டீவ் எனர்ஜியை மட்டும் உடன் வைத்து கொண்டு படிக்கவும்.

 

 

தேர்வு உபகரணங்கள்:

போர்டு எக்ஸாமுக்கு தேவையான பேனா, பெண்சில், கனித உபகரணங்களான ஜாமின்ரி பாக்ஸ் போன்றவற்றை தயாரக வாங்கி பயன்படுத்தி பார்த்து கொண்டு தேர்வுக்கு எடுத்து செல்லவும். சிலர் தேவைப்படின் பூஜையில் வைத்து தேர்வுக்கு முன் பயன்படுத்தி பார்த்து தேர்வுக்கு உபயோகப்படுத்துங்கள். தேர்வு மையத்தில் புதிதாக எந்த பொருளையும்  பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் தேர்வு நேரத்தில் புதிதாகப் பயன்படுத்தும் ஒன்று சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் டென்சன் எதிரொலிக்கும் அதற்காகவே தேர்வுக்கு முன்பே புதிதான உபகரணங்களை பயன்படுத்தி பார்த்து தேர்வுக்கு ரெடியாக வைக்கவும். 

ஓய்வு தேவை :

தேர்வுக்கு முந்தின இரவில் நீண்ட நேரம் படிக்க வேண்டாம் தேர்வுக்கு முந்தின நாள் 11 மணிக்குள் தூங்கச் செல்லவும் காலை 5.30 மணிக்கு மேல் படிக்கலாம்.
தேர்வு முடியும் வரை ஒரிடத்தில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்யவும் அது மன உலைச்சல் படப்படப்பை குறைக்கும். கோவில்கள், தொழுகைகள் செய்யவும் மனதை அமைதி நிலையில் வைத்து படிக்கவும்.

கோடைகாலம் :

மார்ச் 1 முதல் பருவ காலம் மாற்றம் ஏற்படும் கோடைக்கால துவக்கம் அதனால் உடலினை குளிர்ச்சியாக வைத்து கொண்டு படிக்கவும். வீட்டில் மட்டுமே உணவு சாப்பிடுங்க, தேர்வு முடியும் வரை வேறு கமிட்மெண்டுகள் அனைத்தையும் நிறுத்தவும். வீட்டீல் உள்ள பெரியோர்களின் அறிவுரையை குறைந்த பட்சம் தேர்வு முடியும் வரை கேட்டு பாருங்க தேர்வின் ரிசல்டில் அதன் தாக்கம் தெரியும்.

தேர்வு மையம் :

தேர்வு மையத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே செல்லவும். டிராபிக்குகள் அனைத்தையும் மனதில் வைத்து ரெகுலர் நேரங்களை விட கொஞ்சம் சீக்கிரமே கிளம்புங்க. தேர்வுக்கு மறக்காமல் ஹால் டிக்கெடினை பாதுகாத்து உடன் வைக்கத்திருக்கவும். தண்ணீர் தாகம் தேர்வு நேரத்தில் எடுக்கும் அதற்கு தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துகோங்க. ஒருவேளை அனுமதியில்லையெனில் தயங்காமல் தேர்வு மையத்தில் தண்ணீர் கேட்கலாம்.
தேர்வு மையத்தில் உள்ளே சென்றதும் உங்கள் இருக்கைகளை பரிசோதித்து ஏதேனும் துண்டு சீட்டுகள் கிடைத்தால் எடுத்து குப்பை தொட்டியில் போட்டு விடுங்க. எந்த காரணம் கொண்டும் தேர்வு அறையில் எதிர்மறையான பிட் அடிக்கும் யுக்திகளை கையால வேண்டாம்.

தேர்வு நேரம் முடியும் பத்து நிமிடங்களுக்கு முன்பே எழுதி முடிக்கவும் முழுவதுமாக செக் செய்து கொண்டு தவறுகள் ஏதேனும் இருந்தால் திருத்தி கொடுங்கள்.

 

அடித்தல் திருத்தல்:

அடித்தல் திருத்தல்கள் இல்லமல் தேர்வுத்தாளினை அழகு போல் கையாளுங்கள். எழுதுவதை பிழையின்றி எழுதுங்கள். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை கொடுங்கள். சரியான தேர்வு எண், மற்றும் தேர்வுத்தாளில் கேள்வி எண்களை தவறன்ரி  குறிப்பிடவும். தவறுகள் ஏதேனும் தெரியாமல் செய்து விட்டால் அதனை எரேசர்கள் வைத்து அழிக்கலாம். தைரியமாக இருங்கள் பதட்டப்பட வேண்டாம். 

Image Resource 

எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் கவனச் சிதறல்கள் :

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் எதிர்பாராத எந்த ஒரு பாஸிட்டிவ் மற்றும் நெகடீவ் நிகழ்வுகளுக்கு அதிகமாக நேரத்தை செலவிட்டு தேர்வு காலத்தில் கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். இந்த பரிட்சை உங்கள் வாழ்க்கையில் திருப்புமுணை என்பதை உணர்ந்து தேர்வில் மாணவர்கள் கவனம் செலுத்த பெற்றோர்கள் வழிக்காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான போர்டு எக்ஸாம் அட்டவணை வெளியீடு

English summary
Article tells about tips for State board exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia