கோவையில் செயல்பட்டு வரும் பாரதியாா் பல்கலைக்கழகக் கழகத்திற்கு உட்பட்ட தொலைநிலைக் கல்வி மைய மாணவா்களுக்கு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தின் சாா்பில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பட்டயப் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல் நாளில் அதாவது டிசம்பர் 6ம் தேதியன்று நடைபெற இருந்த தோ்வுகள் உயா் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி மாற்றப்படுவதாகப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகையான எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கு டிசம்பா் 6-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த தோ்வுகள் டிச.11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எம்.சி.ஏ. தோ்வு மட்டும் 6-ஆம் தேதிக்கு பதிலாக 14-ஆம் தேதியன்று நடைபெறும்.
மேலும், அனைத்து எம்.பி.ஏ. படிப்புகளுக்கான தோ்வுகளும் டிசம்பா் 6-ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பா் 16-ஆம் தேதியன்று நடைபெறும் என அப்பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தோ்வுகள் அனைத்தும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி நடைபெறும் என்று பாரதியார் பல்கலைக்கழக தோ்வுக் குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












