தமிழக மாணவர்களே நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளீர்களா?

Posted By:

சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதனுமா வேணடாமா என்ற குழப்பத்தில் உள்ளீர்களா குழப்பம் வேண்டாம். நீட் தேர்வு என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். இது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு தேர்வாகும்.

நீட் தேர்வுப் பற்றிய பல தகவல்கள் வெளியான வண்ணமாக உள்ளன. இந்தத் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும். நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ், படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வாகும்.

உச்ச நீதி மன்ற ஆணையின்படி தனியார் கல்லூரிகள் உள்ள இட ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களும் நீட் தேர்வு மூலம் கடந்த ஆண்டு (2016-17) நிரப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு அதிலிருந்து முற்றிலும் விலக்கு வேண்டும் எனவும் கலந்தாய்வு மூலம் மட்டுமே தமிழக மாணவர்கள் எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ், படிப்பிற்காக தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதால் கடந்ந வருடம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

தமிழக மாணவர்களே நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளீர்களா?

மாநில அரசுக்கு 85% ஒதுக்கீடு

அரசுக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு என்று 85% இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு கலந்நதாய்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்களில் மாநில அரசுக்கு என ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடும் கலந்தாய்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

சிபிஎஸ்இ

நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. அதனால் கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புறங்களில் சிபிஎஸ்இ அல்லாத பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள். என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் சட்டமசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் அது நிறைவேற்றப்பட வேண்டும். பின்பு உச்ச நீதி மன்றத்திலிருந்து ஒப்புதல் வரவேண்டும். மாநில அரசு பாடத்திட்டம் மற்றும் மத்திய அரசு பாடத்திட்டம் என வேறுபட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் கல்வி கற்று வரும் இந்நிலையில் நீட் தேர்வு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை மேற்கொள்ள இருக்கும் இந்ந நேரத்தில் நீட் தேர்வு மேலும் ஒரு அழுத்தத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும்.

அனைவருக்கும் சமமான கல்வி

கல்வி என்பது அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். எளிதாக்கப்பட வேண்டும். கிராமப்புற மாணவர்களும் எந்தப் படிப்பில் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம் என்ற நிலை வரும் போதுதான் அது நாம் கல்வி அமைப்பில் பெறும் வெற்றி ஆகும். எனவே மாணவ மாணவியர்களே நீங்கள் எந்தக் குழப்பமும் இல்லாமல் தைரியமாக பொதுத் தேர்விற்கு தயாராகுங்கள். முதலில் பொதுத் தேர்வை மட்டும் பற்றி சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

ஜல்லிக்கட்டு சட்ட மசோதா பாணியில்

ஜல்லிக்கட்டிற்காக சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு உச்சநீதி மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது போல் இதற்கும் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா நிறைவேற்றப்படும் மற்றும் உச்சநீதி மன்றத்தில் ஒப்புதல் பெறப்படும் என கிராமப்புற மாணவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக தமிழக அரசு விரைந்து செயல் பட வேண்டும் மற்றும் சட்ட ஆலோசகர்களும் இதற்காக விரைந்து செயல்பட்டு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

English summary
English summary : you dont confuse about the neet exam, you will prepare the public exam.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia