கஜா புயல் பாதிப்பின் காரணமாக இன்று (நவம்பர் 19) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கஜா புயலின் தாக்கத்தால் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், இராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பல இடங்களில் தற்போது வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு காரணமாக இன்று (நவம்பர் 19) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கும் இன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












