பிஇ, பிடெக் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்!

இளநிலை பட்டப்படிப்புகளான பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்லைன் பதிவு இன்று (மே 2) காலை முதல் தொடங்கியது.

இளநிலை பட்டப்படிப்புகளான பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்லைன் பதிவு இன்று (மே 2) காலை முதல் தொடங்கியது.

பிஇ, பிடெக் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்று வந்த நிலையில் 2019-20ஆம் கல்வியாண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத அல்லது வசதி இல்லாத மாணவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tneaonline.in அல்லது www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான மேலும் விவரங்களை அறிய 044 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Admission 2019: Application process For BE, B.Tech, started Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X