தமிழகத்தில் வரும் கல்வியாண்டு 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில், தற்போது, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என வெளியான தகவலால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்க்குள்ளாகியுள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறை அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். தினமும் தேர்வுகள் நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
ஈரோடு மாவட்ட அதிகாரியின் இந்த சுற்றறிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை இல்லை என தெரிவித்துள்ளது.
அமைச்சர் விளக்கம்
இதற்கிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு நிச்சயமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












