ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஏழு முக்கியமான டிப்ஸ் படிங்க

Posted By:

ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களே வெற்றிக்கு நீங்க தெரிந்திருக்க 7 வழிகள் அதனை எந்த அளவிற்கு முறைப்படி கடைப்பிடிக்கின்றிர்களோ நிச்சயம் நீங்கள் வெற்றிக்கனியை பறிக்கலாம்.

ஏழுவழிகள் இருக்கு நீங்கள் வெற்றி பெற ஏழுவழிகள் அந்த ஏழினை கடைப்பிடித்தால் எந்தவொரு  இலக்கையும்  வெல்லலாம். வாருங்கள் அறிந்து கொள்வோம்.

முன்னோட்டம் :

ஐஏஎஸ் போட்டி தேர்வினை வெல்ல கடைப்பிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகள் உள்ளன. ஐஏஎஸ் போட்டி தேர்வினை குறித்த முழுமையான முன்னோட்டத்தினை தேர்வர்கள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் தேர்வு குறித்து தெளிவாக தெரிந்து கொண்டாலே போதும் வெற்றி பெறுவதற்கு  எளிதாக நீங்களே ஒரு பாதை வழிவகுத்துவிடுவீர்கள்.

image source

சுயதேடல் :

ஐஏஎஸ்குறித்த இடைவிடாத சுய தேடல் இருக்க வேண்டும் அதுப்படி சுயதேடல் சரியாக உங்களிடம் இருக்கின்றதென்றால் அது போதுமானது ஆகும். நீங்கள் சுய தேடலுடன் இருக்கும்பொழுதுதான் உள்ளூணர்வு உங்களை வழிநடத்தும். அதன்படி நீங்கள் வெல்ல எளிமையாக இருக்கும்.
ஐஏஎஸ்தேர்வினை பொருத்தவரை வெற்றி கதைகளை தெரிந்து கொண்டது போல வெற்றி பெறாத கதைகளை தெரிந்து கொண்டால் அந்த தவறை நீங்களும் செய்ய மாட்டீர்கள்.

Image Source

போட்டி தேர்வில் உங்கள் தகுதி:

ஐஏஎஸ் போட்டி தேர்வினை எழுத முடித்து எடுத்தாச்சு இனிமேல் படிக்க வேண்டியது தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டியதுதான் உங்கள் இலக்கு என்ற அடுத்த கட்டத்தில் இப்பொழுது நீங்கள் இருக்கிறீர்களென்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே அது உங்களுடைய தகுதியினை எடைபோடுங்கள். சுய சோதனை செய்யுங்கள் அதென்ன சுயசோதனை என்றால் தேர்வு குறித்த முன்னோட்டம் கிடைத்துவிட்டது, ஐஏஎஸ் தேர்வினை நல்ல ஒரு பாதையும் சுய தேடலால் பெற்றாகிவிட்டது. இனி நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

தேர்வினை நோக்கிய அடுத்த கட்ட உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் உங்கள் முடிவானது உங்கள் வாழ்வில் முக்கியமான திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். ஆகவே அந்த திருப்புமுனையான வாழ்வுக்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களை முழுமையாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டு வெற்றி பெறுவது ஆகும்.

கட்டமைப்பு:

போட்டி தேர்வுக்கு படிக்க தொடங்கிவிட்டீர்கள் இப்பொழுது உங்களை பற்றிய ஒரு கண்ணோட்டம் உங்களுக்குள் இருக்கும். நீங்கள் தேர்வினை வெற்றி பெற தகுதி பெற்றவர்கள் என்பதை தெரிந்துவிட்டது. ஐஏஎஸ் இலக்கை அடைய ஒரு தனிவழியிருக்கின்றது. அதனை எவ்வாறு முழுமையாக கடைப்பிடிக்க போகின்றிர்கள் , ஐஏஎஸ் வெற்றிக்கு நீங்கள் உங்களை சுயமாக கட்டமைப்பது மிகமுக்கியமானதாகும். சுய கட்டமைப்பு என்பது அவசியமாகும் அதனை ஏனோதானோ என்று குருட்டு நம்பிக்கையில் செயல்படுத்த முடியாது நம்பிக்கையுடன் உழைப்பு இருக்க வேண்டும். அது இருக்கின்றதென்றால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.

Image Source

கடின உழைப்புடன், புத்தியும் வேலை செய்ய வேண்டும்:

ஐஏஎஸ் என்ற ஒரு இலக்கை அடைய எடுத்த எடுப்பில் ஓடுவது முட்டாளாக்கிவிடும். முதலில் சரியாக நிற்க கற்றுகொண்டு, பேலன்ஸ் செய்து ஓட கற்றுகொள்வது நல்லதாகும்.

மாங்கு, மாங்கு என்று படித்துவிட்டு மண்டை வழிக்கின்றது என்றால் தவறு உங்களிடத்தில்தான் உள்ளது. எவ்வளவு படித்தாலும், எப்படி படித்தாலும் படிப்பவற்றை ஈடுபாடோடு படிக்க வேண்டும். தேர்வு என்பதை கடந்து படிக்க வேண்டும். புத்திசாலித்தனமாக திட்டமிட்டு படிக்க வேண்டும். பிராகடிக்கலாக நீங்கள் படிப்பதை ஒப்பீடு செய்து படியுங்கள்.
ஐஏஎஸ் தேர்வை பொருத்தவரை வருத்தி படிப்பதைவிட விரும்பி படிக்க வேண்டும். படித்தவற்றை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு தனிமனித வருமானம் பற்றி படிக்கிறீர்கள் என்றால் அதை நடைமுறையில் உங்கள் குடும்ப மற்றும் சுற்றாத்தார் வருமானம் குறித்து ஒப்பீடு செய்ய வேண்டும்.

நாட்டு வருமானம் படிக்கிறீர்கள் என்றால் அது குறித்த கணக்கீடுகளை மக்களோடு அப்ளை செய்து பார்க்க வேண்டும்.

அடிப்படை உரிமை, கடமைகள் பற்றி படிக்கின்றீர்கள் என்றால் அதனை எவ்வாறு நடைமுறையில் நாம் கடைப்பிடிக்கின்றோம். எவ்வாறு உங்கள் படிப்பு திட்டங்கள் இருக்க வேண்டும், என்ற சுமார்ட்டாக சிந்திக்க தெரிந்தால் நீங்கள்தான் சாம்பியன்.

Image Source

படித்தவற்றை தேர்வறையில் பயன்படுத்த தெரிய வேண்டும்.

ஐஏஎஸ் தேர்வுக்கு நீங்கள் நிறைய படித்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அது சிறந்த முயற்சி ஆகும். நீங்கள் சுயமாக படித்தாலும் அல்லது பயிற்சி வகுப்பில் படித்தாலும் அது தனிப்பட்ட உங்களது விருப்பம். ஆனால் எப்படி படித்தாலும் படித்தவற்றை தேர்வறையில் பயன்படுத்தும் அளவிற்கு உங்களை தயார்ப்படுத்தி செல்ல வேண்டும். தேர்வறையில் உங்கள் படிப்பின் ஆழம் மற்றும் அளவுகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே படித்தவற்றை சரியாகப் பயன்படுத்த தெரிந்துவிட்டால் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறலாம்.

Image source

விதிமுறைப்படி பயணித்தல் :

ஐஏஎஸ் தேர்வானது கடினமானது இல்லை, ஆனால் சரியாக கணிக்க தவறினால் தவறாகிவிடும். ஐஏஎஸ் தேர்வினை பொருத்தவரை மேலே கூறிய அனைத்து வழிகளையும் முழுமையாக நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால் நிச்சயம் ஐஏஎஸ் தேர்வு குறித்த உங்கள் பார்வையில் பெரிய மாற்றம் இருக்கும். அது உங்களை நிச்சயம் வழிநடத்தும். தேர்வுக்கான வெற்றி பாதையினை தெளிவாக கற்றுகொள்வதுடன் கடைப்பிடிக்க வைக்கும். தேவையற்ற எந்த ஒரு சிக்கலிலும் உங்களை சிக்க வைக்காது.

Image Source

சார்ந்த பதிவுகள்:

ஐஏஎஸ் தேர்வை வெல்ல பொது அறிவு கேள்விகள் குறித்த குறிப்புகள்

English summary
The article tells about Cracking points to IAS exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia