அடேங்கப்பா...நீட் தேர்வு எழுத 23.82 லட்சம் பேர் விண்ணப்பம்...!!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு எழுத, நாடு முழுவதும் 23.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக என்டிஏ (தேசிய தேர்வு முகமை) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அடேங்கப்பா...நீட் தேர்வு எழுத 23.82 லட்சம் பேர் விண்ணப்பம்...!!

அதன்படி 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து இந்தத் தேர்வு எழுத நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் 10 லட்சத்து 18,593 மாணவர்கள், 13 லட்சத்து 63,216 மாணவிகள், 24 திருநங்கைகளும் அடங்குவர். மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 லட்சத்து 39,125 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 55,216 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளை விட நீட் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 2022-ம் ஆண்டில் 18 லட்சத்து 72,343 பேரும், 2023-ம் ஆண்டில் 20 லட்சத்து 87,449 பேரும் தேர்வெழுத விண்ணப்பித்தனர். அதை விட கூடுதலாக நடப்பாண்டில் 23 லட்சத்து 81,833 மாணவர்கள் நீட் தேர்வுக்காக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Eligibility cum Entrance Test UG (NEET UG) this year registered 23 lakh applications for the exam scheduled to take place on May 5. This time, the National Testing Agency (NTA) recorded an all time high in the overall registrations for graduate medical entrance examination. This time, a total of 23,81,833 students have registered for NEET UG 2024, of which over 10 lakh are male students, over 13 lakh are girls and 24 students have registered under the ‘third gender’ category. Out of the registered 23 lakh students, over 10 lakh students are OBC NCL as per list, 6 lakh are general students, 3.5 lakh are Scheduled Caste (SC) students, 1.8 lakh students are from Gen-EWS category and 1.5 lakh are from the Scheduled Tribe (ST) category.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+