தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

Posted By:

சென்னை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 இன்று தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 2434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்விற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

ஒழுங்கீனச் செயலை ஊக்குவித்தாலோ அல்லது அதற்கு துணைப் போனாலே பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும 6737 பள்ளியினைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை இன்று எழுதுகிறார்கள். மொத்தம் 898763 மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வினை எழுதுகிறார்கள்.

417994 மாணவர்களும் 480837 மாணவியர்களும் பொதுத் தேர்வினை எழுதுகிறார்கள். மேலும் ஒரு திருநங்கையும் தேர்வினை எழுதுகிறார்.

தமிழகம் முழுவதும் 34868 தனித் தேர்வாளர்களும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுகிறார்கள்.

4000க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பொதுத் தேர்விற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறையில் மாணவர்கள் நேர்மையாக எழுதுகிறார்களா என்பதைக் கண்காணிக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் எந்த வித ஓழுங்கீனச் செயல்களிலும் ஈடுபடாமல் தேர்வினை எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 407 பள்ளியினைச் சேர்ந்த 53573 மாணவ மாணவியர்கள் தேர்வினை எழுதுகிறார்கள்.

வேலூர் மற்றும் கடலூர் புழல் சிறையில் கைதிகளாக உள்ளவர்களில் 100 பேர் பொதுத் தேர்வினை எழுதுகிறார்கள். அவர்களில் 2 பேர் தனித்தேர்வு எழுதுகிறவர்கள். புழல் சிறையிலேயே இவர்களுக்கு தேர்வு மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் தேர்விற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.

English summary
12th std exam today. 417994 male students and 480837 female students write examination across tamilnadu.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia