+2 தேர்வு முடிந்தது - கடைசித் தேர்வில் பிட் அடித்து 12 மாணவர்கள் சிக்கினர்

பிளஸ்டூ தேர்வில் 12 மாணவர்கள் தாவரவியல், வர்த்தக கணிதம், வரலாறு, உயிரியல் ஆகிய கடைசித் தேர்வில் காப்பி அடித்து சிக்கினர்.

சென்னை: தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. நேற்று மார்ச் 31ம் தேதி நடைபெற்ற கடைசித் தேர்வில் காப்பியடித்து எழுதிய 12 மாணவர்கள் பிடிபட்டனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் தேர்வு நிறைவடைந்தது. நேற்று வெள்ளிக்கிழமை கடைசித் தேர்வாக உயிரியல், தாவரவியல், வர்த்தக கணிதம், வரலாறு ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.

+2 தேர்வு முடிந்தது - கடைசித் தேர்வில் பிட் அடித்து 12 மாணவர்கள் சிக்கினர்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எந்த வித ஒழுங்கீனச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுபவர்கள் கண்டுப் பிடிக்கப்பட்டால் வன்மையாகத் தண்டிக்கபடுவார்கள் எனவும் கூறியுள்ளது. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து காப்பியடித்து எழுதிய சம்பவம் பள்ளிக்கல்வித்துறைக்கு சோதனையாக அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும், ஈரோடு மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவர்களும் நேற்றைய தேர்வில் காப்பியடித்தற்காக பிடிபட்டனர்.

மார்ச் 2ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் எடுத்து பயின்றவர்களுக்கு 27.03.2017ம் தேதி அன்று தேர்வு முடிவடைந்தது.

உயிரியியல், வரலாறு, தாவரவியல் மற்றும் வணிக கணிதம் எடுத்து பயின்ற மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (31.03.2017ம்) வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.

ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வுத் தாள் திருத்தும் பணி ஆரம்பமாகும். அதற்காக 64 மையங்கள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Director of Government Examinations tan. Vasunthara Devi said that 12 students were caught copying in the +2 public exams and sent out from the exam hall.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+