தமிழகத்தில் இன்று பல பள்ளிகளில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

Posted By:

சென்னை : மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் ஆரம்பமானது. ஆனால் தமிழகத்தில் பல பள்ளிகளில் இன்றுதான் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முதல் தேர்வாக ஹிந்தி தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் மாதம் 10ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தின் கீழ் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ தீவுகள் ஆகியன உள்ளன. பெரும்பாலான மாநிலத்தில் நேற்று சிபிஎஸ்இ தேர்வு ஆரம்பமாகியது.

தமிழகத்தில் இன்று பல பள்ளிகளில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு பிரெஞ்சு உள்ளிட்ட தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று ஆரம்பமாகியது. ஏப்ரல் மாதம் 29ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடையும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

பரத நாட்டியம், கதக், ஓடிசி உள்ளிட்ட 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று நடக்கின்றன.

இயற்பியல் நர்சிங் உள்ளிட்ட 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

English summary
cbse 10th & 12th std exam began tomorrow. but 10th cbse public exam today begins in many schools at tamilnadu.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia