10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்ப தெரியுமா?

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுத உள்ள இந்த பரபரப்பான சூழலில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுக்கான தேதியை அறிவித்துள்ளார். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் நாட்டில் முதன் முறையாக பொதுத் தேர்வு முடிகள் வெளியாகும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 12ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்ப தெரியுமா?

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 19ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வினை எழுதி விட்டு எப்ப பொதுத் தேர்வு ரிசல்ட் வரும் எனக் காத்துக்கொண்டிருந்த காலம் போய் பொதுத் தேர்விற்கு முன்னரே தேர்வுக்கான ரிசல்ட் வரும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆச்சர்யம் ஆனால் உண்மை. முதன் முறையாக இந்த ஆண்டு தான் அதாவது 2017ம் ஆண்டில்தான் இந்த ஆச்சர்யம் நடந்துள்ளது. மாணவர்களுக்கு பொதுத் தேர்விற்கான ரிசல்ட் வரும் தேதி முன்னரே தெரியும் என்பதால் எப்ப வரும் எப்ப வரும் என்கிற ஒரு எதிர்ப் பார்ப்பு மற்றும் படபடப்பு குறையும். தேதிகள் திட்டவட்டமாக அறிவிக்கப்ட்டு விட்டதால் மாணவர்கள் முன்கூட்டியே ரிசல்ட்டை எதிர் கொள்ளுவதற்கு தயாராகி விடுவார்கள்.

பெற்றோர்களுக்கும் இந்தத் தகவல் பயனுள்ளதாக அமையும். அவர்களும் தங்களுடைய பிள்ளைகளின் மார்க்குகளை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வத்தோடு இருப்பார்கள். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்க்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முன்கூட்டியே அறிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுத் தேர்வு ரிசல்ட்டிற்கான தேதி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருப்பதால் பொதுத் தேர்வு ரிசல்ட்டைக் குறித்த மன அழுத்தம் மாணவர்களுக்கு குறையும். மாணவர்களே இப்போதே தேர்வு ரிசல்ட் எப்ப வரும் என்பது உங்களுக்கு தெரிந்து விட்டது. எனவே நீங்கள் இன்னும் உற்சாகமாகப் படியுங்கள். ரிலாக்சா படியுங்கள் நிறைய மார்க்குகளை அள்ளுங்கள்.

English summary
10th and 12th public exam result date announced by school education minister.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia