பிரிட்டனில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?

இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக அதிகம் செல்லும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் உள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள் செல்லும் நாடாக பிரிட்டன் உள்ளது. தரமான கல்வி, பிரபலமான கல்வி நிறுவனங்கள், அருமையான வேலைவாய்ப்பு, வளமையான எதிர்காலம் என்ற காரணிகளில் பிரிட்டன் நாடு இந்திய மாணவர்கள் மத்தியில் முன்னிலை பெற்றது.

இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில அமெரிக்கா, ஆஸ்திரேலியா பிரிட்டன் நாடுகளை இந்திய மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். அதேபோல் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களையும் அவர்கள் தேர்வு செய்கின்றனர். இது தவிர இஸ்ரேல், நியூஸிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் செல்கின்றனர்.
இந்தியாவின் உயர் கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விபரப்படி, ஏறத்தாழ 3.85 கோடி மாணவர்கள் உயர்கல்வித் துறையில் பயில்கின்றனர். தேசிய அளவிலான சராசரி மொத்தப் பதிவு விகிதம் 27.1, அதாவது 18-23 வயதுடைய நபர்களில் 100 பேரில் 27.1 நபர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின்

றிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்விக்கான வருடாந்திர கட்டணம் என்பது 5 முதல் பத்து மடங்கு வரை குறைவு. இருப்பினும், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019-ம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில பல காரணங்கள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது மேலும், வெளிநாடுகளில் பயின்று விட்டு இந்தியா திரும்பும் போது முன்னோடி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கிறது.

பிரிட்டனில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?

இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில அதிகம் செல்லும் நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.

வெளிநாடுகளில் பல்வேறு சூழலில், மாறுபட்ட புதிதான கல்வித்திட்டத்தில் மாணவர்கள் நல்ல பயிற்சி பெற்று திரும்புகின்றனர்.

வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில மாணவர்கள் சிலர் தவறான நாடுகளைத் தேர்ந்தெடுத்து விடுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய ஒவ்வொரு நாடும் அவர்களது கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது, அவை அரசு அல்லது அரசு அல்லாத தனியார் அமைப்புகள் (பத்திரிக்கை இதழ்கள், புள்ளி விபர நிறுவனங்கள், இதரவை) மூலம் வெளியிடப்படுகிறது.

உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் QS World University Ranking எனப்படும் Quacquarelli Symonds மற்றும் "Elsevier" நிறுவனமும் இணைந்து வெளியிடும் உயர்கல்வி நிறுவனங்களுங்கான தரவரிசைப் பட்டியல் அதிக கவனம் பெற்றவை. இதைப் பார்த்து அதைத் தேர்வு செய்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட நாடுகளுக்குச் செல்லலாம்.

இந்த‌ தர வரிசை தேர்வானது 6 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியது. 1. கல்வி மதிப்பாய்வு, 2. ஆசிரியர்/மாணவர் விகிதம், 3. ஆசிரியர்களுக்கான மேற்கோள்கள் (ஆய்வு கட்டுரைகள்), 4. உயர்கல்வி நிறுவனத்தின் நன்மதிப்பு, 5. சர்வதேச மாணவர் விகிதம், 6. சர்வதேச பணியாளர் விகிதம் என்பன போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை வெளியிடப்படுகிறது.

தேர்வு உண்டு

ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் ஆங்கில மொழிப் புலமையில் அவர்கள் பரிந்துரைக்கும் தகுதித் தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு செனஅறு உதாரணத்திற்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் IELTS (International English Language Testing System) எனப்படும் ஆங்கில மொழிப்புலமைத் தகுதித் தேர்வில் இளநிலை படிப்புகளுக்கு குறைந்த பட்சம் 6.0 மற்றும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு குறைந்த பட்சம் 6.5 புள்ளிகளை (Band) பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது ஆங்கிலத்தை கேட்பது, படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் என்ற பிரிவுகளில் மதிப்படுப்படுவது.

இந்த தேர்விற்கு கட்டணம் உண்டு, மேலும் இந்த தேர்விற்கான சான்றிதழ் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் அதற்கேற்ப மாணவர்கள் இத்தேர்வை திட்டமிடுவது நல்லது. IELTS போலவே மற்றொரு ஆங்கில புலமை தேர்வான TOEFL (Test of English as a Foreign Language) சான்றிதழை 119 நாடுகளில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மொழித் தகுதியாக ஏற்றுக் கொள்கிறது. ஆகவே எந்த நாட்டிற்கு எந்த மொழிப் புலமைத் தேர்வு எழுத வேண்டும் என்று சரிப் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

பிரிட்டனில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?

பிரிட்டன் ஏன்..?

தற்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனுக்குச் சென்று உயர்கல்வி பயில இந்திய மாணவச் செல்வங்கள் விரும்புகின்றனர்.

வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான தொடக்கப் புள்ளியாக பிரிட்டன் நாடு உள்ளது, ஏனெனில் இது உலகின் பழமையான கல்வி நிறுவனங்களில் சிலவற்றின் தாயகமாக அமைந்து உ லகப் புகழ் பெற்றுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகங்கள் பொறியியல் பட்டப்படிப்புகளைப் படிக்கும் போது பட்டதாரிகளை தரமான தொழிற்துறை இன்ஜினியர்களாக மாற்றுகின்றன.

பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 1000-த்துக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன, மேலும் ஒரு பாடத்தை எவ்வாறு படிக்கலாம் என்பதில் நிறைய நெகிழ்வுத்தன்மையும் இங்கு உள்ளது. இளங்கலை அறிவியல் (BSc), இளங்கலை அறிவியல் பொறியியல் (BSc.Eng), இளங்கலை பொறியியல் (B.Eng), அல்லது இளங்கலை தொழில்நுட்பப்படிப்பு (B.Tech) ஆகியவற்றை 4 அல்லது 5 ஆண்டுகளில் பிரிட்டனில் பெறலாம்.

கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு சிறப்புப் படிப்புகளும் இங்கு உள்ளன. இது இங்கிலாந்து பல்கலைக்கழகங்களை பொறியியல் கல்விக்கு மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. இங்கிலாந்தில் பொறியியல் இளங்கலைப் படிப்புகளில் பெரும்பாலானவை, முதுநிலைப் படிப்புகள் மிகவும் மதிப்புமிக்கவையாக அமைந்துள்ளன. இந்த அனைத்து காரணங்களுக்காகவும் அணுகல் கடினமாக இருக்கலாம் என்பதால், சேர்க்கை எப்போதும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும்.

புகழ்பெற்ற கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்:

பிரிட்டனில் புகழ்பெற்ற அபர்டீன் பல்கலைக்கழகம், ஆஸ்டன் பல்கலைக்கழகம், பங்கார் பல்கலைக்கழகம், பெட்போட்ஷையர் பல்கலைக்கழகம், பிஐஎம்எம் பல்கலைக்கழகம், பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், பர்மிங்ஹாம் நியூமேன் பல்கலைக்கழகம், பால்டன் பல்கலைக்கழகம், பக்கிங்ஹாம் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கேன்டர்பர்ரி பல்கலைக்கழகம், கார்டிப் பல்கலைக்கழகம், துர்ஹாம் பல்கலைக்கழகம், எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகம், எஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி, கிங்ஸ்டன் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன், லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகம், சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் போன்ற ஏராளமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் லண்டன் நகரங்களிலும், அதைச் சுற்றியுள்ள பழமையான நகரங்களிலும் அமைந்து இந்திய மாணவர்களை வரவேற்கின்றன.

பிரிட்டனில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?

அதிக நோபல் பரிசு

உலகளாவிய புகழ்பெற்ற நோபல் பரிசை விரும்புபவர்கள் அதிகம். கடந்த 1901ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை 860 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 131 பேர் தங்கள் கல்வியின் ஒரு பகுதியை வெளிநாட்டில் படித்தவர்கள். இதில் 38 சதவீதத்தினர் பிரிட்டனின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்றவற்றில் உயர்கல்வி படித்தவர்கள். இவ்வரிசையில் 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே அமெரிக்கா, ஜெர்மனி பல்கலைகழகங்கள் வகிக்கின்றன.

பிரிட்டனில் படித்து நோபல் பரிசு வென்ற வெளிநாட்டவர்களில், அதிகபட்சமாக கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில் 18 பேர் படித்துள்ளனர். ஆக்ஸ்போர்ட் பல்கலை.,யில் 11 பேரும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் 5 பேரும் படித்துள்ளனர். தற்போது பிரிட்டனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி கற்று வருகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த மாணவர்கள் 91 பேர் இதுவரை நோபல் பரிசு பெற்றுள்ளனர். இதிலும் கேம்பிரிட்ஜ் பல்கலை., 48 மாணவர்களுடன் முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்த இடங்கள் முறையே ஆக்ஸ்போர்ட்(17) மற்றும் மான்செஸ்டர்(7) பல்கலைகழகங்கள் பிடித்துள்ளன. இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கறது.

பிரிட்டனில் பயின்று, மருத்துவத்துறையில் 17 பேரும், இயற்பியல், வேதியியலில் தலா 8 பேரும், பொருளாதாரத்தில் 7 பேரும், அமைதி, இலக்கியத்திற்கு தலா 5 பேரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவித்தொகை

மேலும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை போன்ற சலுகைகளை பிரிட்டன் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்குகின்றன. இதன் காரணமாகவும் அதிக அளவு மாணவச் செல்வங்கள் பிரிட்டனை நோக்கிப் படையெடுக்கின்றன.

இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிப்பது என்பது உங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும். மதிப்பிற்குரிய பிரிட்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவது என்பது உங்கள் கல்வி மற்றும் உங்கள் வேலை வாய்ப்புகள் இரண்டையும் உயர்த்தும். மேலும், மதிப்புமிக்க மற்றும் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக இந்தப் பட்டங்கள் அமைந்துள்ளன.

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு பல்வேறு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் உள்ளன. பகுதி நிதியுதவி (உங்கள் கல்விக் கட்டணத்தில் பங்களிப்பு) மற்றும் முழு நிதியுதவி (திட்டக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு திரும்பும் விமானக் கட்டணம்) உட்பட இந்த விருப்பங்கள் மாறுபடும்.

இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் இதற்கான வழிமுறைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Studying in the UK offers incredible chances for employment, cultural diversity, and academic brilliance. UK universities are renowned for their excellent teaching, innovative research, and robust industry connections. A wide range of globally acknowledged courses and degrees are offered by UK institutions, which are among the most respected universities in the world. Cultural Diversity: Studying in the UK allows you to experience various cultures and meet people from all over the world.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+