உயர்கல்வி கற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஜெர்மனி செல்ல விரும்புகின்றனர். கனடா நாட்டை விட ஜெர்மனியில்தான் தற்போது அதிக அளவில் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில், சர்வதேச கல்வி மற்றும் மாணவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் தரமான கல்வி வாய்ப்புகளைத் தேடுவதால், உயர்கல்வி பெருகிய முறையில் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. உயர் கல்வியைத் தொடரும் சர்வதேச மாணவர்களின் பிரபலமான இடங்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்திய அரசு, சர்வதேசமயமாக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர்களை ஈர்க்கவும் ஆதரவளிக்கவும் பல சாதகமான கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது. இந்திய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் பல்வேறு படிப்புகள் மற்றும் திட்டங்களை வழங்குகின்றன,
உலகம் முழுவதும் உள்ள மாணவர்களை ஈர்க்கின்றன. வெளியுறவு அமைச்சகம் (MEA) மற்றும் கல்வி அமைச்சகம் (MoE) ஆகியவற்றின் தரவுகளின்படி , இந்தியாவில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-21 இல், ஏறத்தாழ 480,35 சர்வதேச மாணவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர், 2012-13 இல் 34,774 மாணவர்களுடன் ஒப்பிடுகையில், 13,261 மாணவர்கள் (38.13 சதவீதம்) அதிகரித்துள்ளனர். நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், பங்களாதேஷ் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள சர்வதேச மாணவர்களில் கணிசமான விகிதத்தில் உள்ளனர்.

அதேநேரத்தில் 2021-22ல் 4,13,444 இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தனர், இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் உயர் கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரப்படி, ஏறத்தாழ 3.85 கோடி மாணவர்கள் உயர்கல்வித் துறையில் பயில்கின்றனர். தேசிய அளவிலான சராசரி மொத்தப் பதிவு விகிதம் 27.1, அதாவது 18-23 வயதுடைய நபர்களில் 100 பேரில் 27.1 நபர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்.
மிகவும் வளர்ந்த நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்விக்கான வருடாந்திர கட்டணம் என்பது 5 முதல் பத்து மடங்கு வரை குறைவு.
இருப்பினும், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019-ம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது. மேலும் அங்கு அதிக அளவிலான ஊதியம், வாழ்நாள் முழுவதும் சொகுசான வாழ்க்கை என்பதால் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
மேலும் வெளிநாடுகளில் பயின்று விட்டு இந்தியா திரும்பும் போது முன்னோடி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அருமையான வேலைவாய்ப்பு மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. இதனால் வெளிநாடுகளில் பயில மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களில் ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா வரிசையில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது ஏறத்தாழ 7% மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயில ஆர்வம் காட்டுகின்றனர்.
விசா (Visa) பெறுவது எப்படி?
வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் எந்த நாட்டிற்கு போக வேண்டும் என முடிவெடுத்த பின் செய்ய வேண்டிய முதல் பணி, அந்த நாட்டின் குடியேற்றத்திற்கு (Visa) தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்களை தூதரக (Embassy) இணைய தளம் மூலம் தெரிந்து கொள்வது அத்தியாவசியமானது. குறிப்பாக, பிரிட்டன் போன்ற நாடுகள் விண்ணப்பதாரர் குறைந்தது ஆறு மாதம் நடப்பில் உள்ள வங்கி கணக்கை ஒரு ஆவணமாக சமர்பிக்குமாறு கேட்பார்கள். எனவே இதுபோன்ற தகவல்களை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தால் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம்.
மேலும், கல்விச் சான்றிதழ்களை (Testimonial) உரிய நேரத்தில் பெற்று வைத்திருத்தல் அவசியம். பெரும்பாலான வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இளநிலை பட்டய படிப்பின் மொத்த மதிப்பெண் பட்டியலை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனத்தின் அதிகாரபூர்வ அலுவலகத்தின் முத்திரை பதித்த மூடிய உறைக்குள் சீலிட்டு (Transcripts) கேட்பார்கள். ஆகவே இது போன்ற ஆவணங்களை முன் கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.

எந்த நாடு முதலிடம்
தற்போது இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அதிக அளவில் மாணவர்கள் செல்கின்றனர்.
குறிப்பா அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு அதிக அளவுக்கு மாணவர்கள் செல்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் கனடா இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்தைப் போலவே ஜெர்மனிக்கும் அதிக அளவில் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில செல்கின்றனர். தரமான பேராசிரியர்கள் ஜெர்மனியில் உள்ளதால் ஜெர்மனிக்கு பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்திய மாணவர்களில் பலர், இளநிலை, முதுநிலை மற்றும் உயர் தொழிற்கல்வி படிப்புகளுக்காக அமெரிக்கா அல்லது இங்கிலாந்து செல்வது வழக்கமாக இருந்தது.
2022-23 ஆம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் 10,57,188 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது. 2021-22ல் மொத்தம் 9,48,519 மாணவர்கள் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றுள்ளனர். விருப்ப நடைமுறை பயிற்சியை (OPT) தொடரும் மாணவர்களில் 8% வளர்ச்சியை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியர்கள் உள்ளிட்ட அயல்நாட்டினர் அதிகளவில் அங்கு வருவதை தடுக்கும் பொருட்டு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் ஆதரவளித்தது வருகின்றனர்.
இதனால், இரு நாடுகளுக்கு மாற்றாக கனடாவுக்கு இந்திய மாணவர்கள் பெருமளவில் செல்லத் தொடங்கினர்.
இந்நிலையில், கனடாவை விட ஜெர்மனியில் இந்திய மாணவர்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளதாக இணையவழி கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
32.6 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்காக ஜெர்மனி செல்வதையே விரும்புகின்றனர்.
ஜெர்மனியின் புள்ளியியல் துறை தகவலின்படி கடந்த 5 வருடங்களில் ஜெர்மனிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை 146 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா முதலிடம்
இந்திய மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை வெளிநாடுகளில் படிக்க அதிகமாக விரும்புகின்றனர். தற்போது 13.2 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர். அவர்களில் 4.6 லட்சம் பேர் அமெரிக்காவிலும், 1.83 லட்சம் மாணவர்கள் கனடாவிலும் பயில்கின்றனர். என்று தெரியவந்துள்ளது.
தகுந்த படிப்பு வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்திய மாணவர்களுக்கு உதவ, அமெரிக்க வெளியுறவுத் துறை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள எஜுகேஷன்யுஎஸ்சி (EducationUSA) என்ற பெயரில் ஆலோசனை மையங்கள் மூலம் இலவச ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. சர்வதேச கல்வி நிறுவனம் (IIE) 1919 ஆம் ஆண்டு முதல் ஓப்பன் டோர்ஸ் அறிக்கையை வெளியிடுகிறது, 1972 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகத்துடன் இணைந்து இந்த அறிக்கை வெளியிடுகிறது. இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்குவதற்கு உதவுவதற்காக அமெரிக்கா எப்போதும் துணைநிற்கும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
அதேபோல் சமீப காலமாக அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மாணவர்கள் படிக்க விருப்பப்படும் வெளிநாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் ஜெர்மனி, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா மற்றும் மூன்றாவது இடத்தில் பிரிட்டன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
3-வது இடத்தில் கனடா உள்ளது. அதற்கடுத்த இடத்தில் தற்போது ஜெர்மனி நாடு அமைந்துள்ளது.
ஜெர்மனியில் மொத்தம் 423 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன, இதில் 108 பல்கலைக்கழகங்கள், 211 பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் 52 கலை மற்றும் இசைக் கல்லூரிகள் உள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ஜெர்மனியில் இந்தியாவில் இருந்து 42,997 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பொறியியல், சட்ட மேலாண்மை மற்றும் கணிதம் ஆகியவற்றை விருப்ப பாடமாக தேர்ந்தெடுகின்றனர்.
அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெர்மனியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் தற்போது 12 சதவீதம் பேர் இந்தியர்கள். 2019ல் 20,562 என இருந்த எண்ணிக்கை, இந்த வருடம் 42,600 என அதிகரித்துள்ளது.
உயர்ந்து வரும் விலைவாசியும், சர்வதேச மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசின் திட்டங்கள் இல்லாததாலும் கனடாவை மாணவர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இத்துடன், கடந்த வருடம், இந்திய-கனடா உறவுகள் நலிவடைந்ததாலும் இந்தியர்களின் பாதுகாப்பில் அச்சம் நிலவுவதாலும், அங்கு செல்வதற்கு இந்திய மாணவ, மாணவிகள் தயங்குகின்றனர்.
ஆனால், இதற்கு நேர்மாறாக ஜெர்மனியில் உயர்வான கல்வித்தரம், குறைந்த கட்டண விகிதம், உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் தரமான பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி கூடங்கள் போன்ற ஈர்க்கும் அம்சங்கள் உள்ளதால் இந்திய மாணவர்களின் உயர் கல்விக்கு அயல்நாடுகளில் முதல் தேர்வாக ஜெர்மனி மாறி விட்டது.
இதனால் ஜெர்மனிதான் இந்திய மாணவர்களின் உயர்கல்வி மையமாக மாறியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












