தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!

தமிழக மாநிலத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரி, பி.எட்., கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய அரிய வாய்ப்பு ஆசிரியர்களுக்குக் கிடைத்துள்ளது. இதுதொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு trb.tn.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள், பல்தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் தன்னாட்சி அமைப்பாக மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்திலுள்ள ஈவிகே சம்பத் மாளிகையின் மூன்று மற்றும் நான்காவது தளத்தில் இந்நிறுவனம் அமைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தைக் களைவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் இத்தேர்வாணையம் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கங்களாக மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை, ஆசிரியர்களை சரியான நேரத்தில் பணியமர்த்துதல் ஆகியவை அமைந்துள்ளன.

தற்போது 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை பணியமர்த்த டிஆர்பி முடிவு செய்துள்ளது
டிஆர்பி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆங்கிலம் 656, தமிழ் 569, கணிதம் 318, வணிகவியல் 296; வேதியியல் 263, கணினி அறிவியல் 244, இயற்பியல் 226, பொருளாதாரம் 161, விலங்கியல் 132, வரலாறு 126, தாவரவியல் 115, புள்ளியியல் 80, புவியியல் 78, கணினி பயன்பாடு 76, கல்வியியல் 45, அரசியல் அறிவியல் 37, மனை அறிவியல் 36, நுண் உயிரியல் 32, பெரு நிறுவன செயலர் 30 உட்பட 65 பிரிவுகளில் 4 ஆயிரம் காலியிடங்கள் தமிழகம் முழுவதும் அமைந்துள்ளன.

டிஆர்பி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நெட் (NET), செட் (SET) தேர்வில் அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

டிஆர்பி பணியிடங்களுக்கான வயது சலுகை: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 1.7.2024 அடிப்படையில் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

டிஆர்பி பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் டிஆர்பி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு தேதி: இந்த உதவி பேராசிரியர் பணியிடங்ளுக்கு வரும் 4.8.2024-ம் தேதி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே டிஆர்பி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: டிஆர்பி பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 600 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 300 விண்ணப்பக்கட்டணம் செலுத்தினால் போதுமானது.

கடைசிநாள்: விண்ணப்பங்களை 29.4.2024 மாலை 5:00 மணிக்குள் அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு trb.tn.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Candidates who want to be appointed as Assistant Professor in Government Colleges of Tamil Nadu need to know that the application form is going to be available on the official website of the TN TRB at https://trb.tn.nic.in/ from 28 March 2024 to 29 April 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+