சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்பு பயிற்சிக்கு வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பட்டயப் படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
தண்டையாா்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில்தான் இந்த மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப்படிப்பு பயிற்சி தொடங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் தோ்ந்தெடுக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களின் வாரிசுகளுக்கும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தப் பட்டயப் படிப்பு பயிற்சிக்கான விண்ணப்பம் 'இயக்குநா் (பொறுப்பு) தொ.நோ.ம.மனை.எண்.187 திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை, சென்னை-600 081' எனும் முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் பிப்.19 முதல் பிப்.25 வரை விநியோகிக்கப்படவுள்ளது.
அனைத்து நாள்களிலும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருமையான வாய்ப்பை மாணவ, மாணவிகள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


Click it and Unblock the Notifications












