குரூப் 2, 2ஏ பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், உற்சாகத்துள்ளலில் தேர்வு எழுதிய நபர்கள் உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று மிகச் சிறப்பான முறையில் நடந்தேறியது.
குரூப் 2 பிரிவில் சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு, கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், திட்ட உதவியாளர், சிறப்பு உதவியாளர், சிறப்பு கிளை உதவியாளர், நன்னடத்தை அலுவலர், சிறைத் துறை ஆகிய பல்வேறு பதவிகள் உள்ளன. இவற்றுக்கு நேர்காணல் அடிப்படையில் நிரப்படும்.
அதேநேரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வுக்கான பதவிகளாக, நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்களும் உள்ளன.

முன்னதாக தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் தேர்வர்கள் எழுதியிருந்தனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன.
தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, பிற்பகல் என 2 வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. எனினும், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் டிஎன்பிஎஸ்சி மீது விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், அப்போது, குரூப் 2 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ம் தேதியில் வெளியிடப்படவுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் 6,033-ல் இருந்து 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்காக முதலில் வெளியிட்ட அறிவிப்பாணையில் 5,413 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் வெளியான அறிவிப்பில் 5,777 பணியிடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், காலியிடங்களின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் குரூப்-2 பதவிகளில் 161, 2ஏ பதவிகளில் 5,990 என மொத்தம் 6,151 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வரும் 12-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், காலிப்பணியிடங்கள் அதிகரித்து இருப்பது தமிழகத்தில் உள்ள குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தொடர்ந்து உற்சாகத்தில் உள்ளனர்.
நல்ல ஊதியத்துடன் அவர்களுக்கு வேலை கிடைப்பதால் அவர்கள் தொடர்ந்து உற்சாகத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications












