இறை நம்பிக்கை இன்றி, இவ்வுலகில் இருப்பவர்கள் ஒரு சிலரே. அவ்வாறு இருப்பவரும் மறைமுகமாக, ஏதேனும் ஒரு வழியில் இறைவனை துதிக்காமல் இருக்க மாட்டார்.
அவ்வாறு இறை நம்பிக்கை மற்றும் இந்து மதத்தை சார்ந்தவர்? எனில், வேலை தேடும் நபராகவும் இருந்தீங்கனா? உங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பை வாரி வழங்கி வருகிறது. முயற்சி பண்ணுங்க... நிச்சயம் அருள்கிட்டும்.

நிர்வாகம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
· இளநிலை உதவியாளர்
· வழக்கு எழுத்தர்
· வசூல் எழுத்தர்
· சீட்டு விற்பனையாளர்
· அலுவலக உதவியாளர்
· உபகாவல்
· துப்புரவு
· மேளம் செட்
· நந்தவனம்
· உபகோயில் பாரா
· பண்டக காப்பாளர்
· மேற்பார்வையாளர்(துப்புரவு)
·ஓதுவார்
· நாதஸ்வரம்
· திருவிளக்கு
· உதவி சுயம்பாகம்
· வரைவாளர்
· பிளம்பர்
· உதவி மின் பணியாளர்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃலைன்/ அஞ்சல் வழி
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.09.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 57
கல்வி தகுதி
குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பி.இ., பிடெக்., ஐ.டி.ஐ., பத்தாவது, எட்டாவது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை பணிக்கு தகுந்தவாறு பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 நாளன்று, 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதான 35 ஐை நிறைவடையாதவராக இருத்தல் அவசியம். கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் ஏதுமில்லை.
தேர்வு முறை
செய்முறை தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இந்து மதத்தினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்; இறை நம்பிக்கை உடையவராகவும், விண்ணப்பதாரர்கள் இருத்தல் அவசியம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரி படிவத்தை நகல் எடுத்து, பிழையின்றி பூர்த்தி செய்து, கடைசி நாளான செப்டம்பர் 5 மாலை 5.00 மணிக்குள், அறிவிப்பாணையில் வழங்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஏனைய இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்பணிகளுக்கு, 05.09.2022ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மறக்காதீங்க...!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன்
திருக்கோயில், இருக்கன்குடி, சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம்,
மின் அஞ்சல் - 626202.
கவனமாக படியுங்க...!
·வண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
· ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, தொடர்புடைய பதவியை குறிப்பிட்டு தனித்தனியே விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
·ரு விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
· விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
· பூரத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.
· விண்ணப்பங்களை அனுப்பும் போது மேலுறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!
https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?
https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=35702
இதற்கும் விண்ணப்பிக்க அவகாசம் இருக்கும்... கீழே உள்ளதையும் பாருங்க...!
https://tamil.careerindia.com/jobs/madurai-meenakshi-amman-temple-job-notification-2022-008388.html