தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான விண்ணப்பச் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் மே 10-ம் தேதி முதல் விண்ணப்ங்களை அனுப்பலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.tndalu.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14-ம் தேதி உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. சென்னையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக் கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது. தற்போதுமிகச் சிறப்பான முறையில் இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சட்ட நிபுணர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 6-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான படிப்புகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பத் தொடங்கவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தற்போது பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு வரும் 10-ம் தேதி முதல் மே.31-ம்தேதி வரை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
மேலும், 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












