தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 2018 டிசம்பர் 29 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யுஜிசி அனுமதியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ், ஆங்கிலம், மேலாண்மையியல், கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், பண்டைய வரலாறு, தொல்பொருளியல், கணினி அறிவியல், மற்றும் புவியியல் உள்ளிட்ட துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன.
யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற தகுதியுடைய மாணவர்கள், உதவித் தொகையுடன் இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும்.
இதற்கான விண்ணப்பத்தினை பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












