நீங்கள் ஐடிஐ படிப்பு மட்டும்தான் படித்துள்ளீர்கள் என்று கவலை கொள்ள வேண்டாம். மத்திய அரசு வேலை தற்போது ஐடிஐ படித்தவர்களுக்காகக் காத்திருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இரும்பு உருக்காலை நிறுவனத்தில் (செயில்) தற்போது காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிகலாம். கூடுதல் விவரங்களுக்கு sail.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
செயில் (SAIL) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். ரூ. 48,681 கோடி ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

மத்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் செயில் உள்ளது. பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ, பர்ன்பூர் ஆகிய 5 நகரங்களில் செயில் உருக்காலை பிரமாண்டமாக அமைந்துள்ளது. மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது.
செயில் நிறுவனத்திடம் உள்ள பெரிய ஆலைகளில் முக்கியமானது ரூர்கேலா இரும்பு உருக்காலை ஆகும்.
ரூர்கேலா இரும்பு உருக்காலை (RSP), ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் அமைந்துள்ளது.இது 1959-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மேற்கு ஜெர்மன் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் பழங்குடியின மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 19,000 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டது.
2010-12 விரிவாக்கத்துக்குப் பின்னர், RSP தற்போது 4.5 MTPA (ஆண்டுக்கு மில்லியன் டன்) ஹாட் மெட்டல், 4.2 MTPA கச்சா ஸ்டீல் மற்றும் 3.9 MTPA விற்பனையான ஸ்டீல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. 19,134 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
தற்போது இந்த பெருமைமிகு செயில் நிறுவனத்தில்தான் உதவியாளர் பணியிடங்கள் 34, ஆப்பரேட்டர்(எலக்ட்ரிக்கல், மைனிங்) 20, டெக்னீசியன் பாய்லர் 20, அசிஸ்டென்ட் மேனேஜர் 10, மெடிக்கல் ஆபிசர் 14, மைனிங் போர்மேன் 6 பணியிடங்கள் உட்பட மொத்தம் 108 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
செயில் நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய பிரிவை பொறுத்து எம்.பி.பி.எஸ். அல்லது டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ. படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
செயில் நிறுவன பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் 7.5.2024 அடிப்படையில் மெடிக்கல் ஆபீஸர் 34, மற்ற பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையையும் அறிவித்துள்ளனர்.
தேர்ச்சி முறை: செயில் நிறுவன பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: செயில் நிறுவன பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: செயில் நிறுவன பணியிடங்களுக்கு பதவி வாரியாக ரூ. 700, ரூ. 500, ரூ. 300 என விண்ணப்பக் கட்டணங்கள் மாறுபடுகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
கடைசிநாள்: இந்த செயில் நிறுவன காலிப் பணியிடங்களுக்கு வரும் 7.5.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு sail.co.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












