இந்திய பறவையியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் சலீம் அலி. அவர் பெயரில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில், விலங்கியல், தாவரவியல்,சுற்றுச்சூழல் அறிவியல், வனவிலங்கு அறிவியல், வாழ்க்கை அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால்,
ஆராய்ச்சி உயிரியலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அரிய வாய்ப்பு தவற விடாதீங்க..!

நிர்வாகம் : சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON).
மேலாண்மை : மத்திய அரசு
பணி விவரம்
Senior Research Biologist - 01
Junior Research Biologist - 02
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2022
பணியிடங்கள்: 3
கல்வி தகுதி
அரசு மற்றும் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில், Zoology, Botany, Environmental Sciences, Wildlife Sciences, Life Science ஆகிய பாடப் பிரிவில், முதுகலை பட்டப்படிப்பு(Post Graduate) முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
மூத்த ஆராய்ச்சி உயிரியலாளர் பணிக்கு வயது வரம்பு அதிகபட்சம் 32 வயதாகும். இளநிலை ஆராய்ச்சி உயிரியலாளர் பணிக்கு வயது வரம்பு அதிகபட்சம் 28 வயதாகும்.
ஊதியம்
மூத்த ஆராய்ச்சி உயிரியலாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் ரூ.35,000/- மாத
ஊதியம் வழங்கப்படும்.இளநிலை ஆராய்ச்சி உயிரியலாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 31.07.2022ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
சரியாக சொல்லப்போனால் ஒரு வாரம்இருக்கு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பணியிடங்கள் தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!