வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அரணாக விளங்கும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்...!!

வெளிநாடு சென்று வேலை செய்வதற்கு உதவும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம். இந்த நிறுவனம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பணியாளர்கள், நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த அயல்நாட்டு வேலை நிறுவனம், தமிழக அரசின் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி இந்தியர்கள் வெளிநாடுகளில் புரிந்து வரும் செயல்திட்டங்களுக்கும் இங்கிருந்து ஆட்களை அனுப்பி வைக்கிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விபத்து மற்றும் உடல்நல காப்பீடுகளையும் வழங்குகிறது.

மேலும், வெளிநாட்டு பணிக்காக அனுப்பி வைக்கப்படும் நபர்களின் நிலை குறித்து அவ்வபோது ஆராய்வதாகவும் அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். இவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல், பதிவு செய்தல், அவ்வபோது நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளச் செய்தல் போன்றவற்றையும் மேற்கொள்வதாக இதன் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அரணாக விளங்கும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்...!!

சிக்கல்கள்:

ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். அதில் பலர் சரியான முகவர்கள் மூலம் சரியான வேலைக்குச் சென்று பத்திரமாக வீடு திரும்புகிறார்கள். ஆனால், சிலரோ போலி முகவர்களை நம்பிச் சென்று தவறான இடத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு விதமான இன்னல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும்கூட ஆளாகிறார்கள்.

பதிவு செய்யப்படாத போலி ஆட்சேர்ப்பு முகவர்களால், வேலை வாய்ப்பு தருவதாக ஏமாற்றப்படுவதாலும், ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை அதிகக் கட்டணம் வசூலிப்பதாலும், வெளிநாட்டு வேலை தேடுபவர்களில் ஏமாற்றப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தப் பதிவு செய்யப்படாத / சட்டவிரோத முகவர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெறாமல் செயல்படுகிறார்கள், இது வெளிநாட்டில் வேலை செய்வதற்கான எந்தவொரு ஆட்சேர்ப்புக்கும் கட்டாயமாகும்.

பேஸ்புக், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் பல சட்டவிரோத முகவர்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகமைகள் அவர்கள் இருக்கும் இடம் மற்றும் தொடர்புகள் பற்றிய சிறிய அல்லது எந்த விவரங்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழக்கமாக வாட்ஸ்அப் மூலம் மட்டுமே தொடர்புகொள்கிறார்கள், இதனால் அழைப்பவரின் இருப்பிடம், அடையாளம், வேலை வாய்ப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது கடினம்.

இத்தகைய முகவர்கள் கடினமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்ய தொழிலாளர்களை ஈர்க்கிறார்கள். பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சில வளைகுடா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், இஸ்ரேல், கனடா, மியான்மர் மற்றும் லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றில் பணிபுரிய ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இதுபோன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
எனவே, தொழிலாளர்கள் இதுகுறித்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்வது முக்கியம்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த நிறுவனத்தின் மூலமாக சரியான மற்றும் பாதுகாப்பான பணிகளுக்கு தமிழ்நாட்டின் மக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின் சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து தருகின்றனர். மேலும் அதற்கான பயிற்சிகளும்கூட வழங்குகின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டால் பின் சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், இந்நிறுவனம் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன....

இங்கு பதிவு செய்ய தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்கு செல்ல விரும்பும் துறைகளில் 2 வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது.

விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை 600 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை மாறும். இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.

இது தொடர்பான விளக்கங்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Overseas Manpower Corporation ல்டட்., முதல் மாடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், No.48, Dr.முத்துலக்‌ஷ்மி சாலை, அடையாறு, சென்னை - 600 020.

புதுப்பித்தல்:

மேலும் விண்ணப்பங்களை 2 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை 044 24464267அல்லது 044 24464268 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணலாம்.

உதவிகள் பெற...:

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பணி புரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்து கூடுதல் தகவல்கள் பெறலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்து கவுன்சிலிங்கை பெற விரும்புபவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:- எண். D-19, Okhla Industrial Area, Phase - I, New Delhi-110019. என்ற முகவரியை அணுகலாம்.

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணலாம்.

பணிகள் என்ன...:
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கான இந்திய மனிதவளத்தின் ஆள்சேர்ப்பு முகவராக செயல்படுதல்,
சொந்தமாக அல்லது சார்பாக கூட்டு தொழில்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கவும் நிறுவவும் அரசு.
இந்தியாவில் உள்ள திட்டங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடமிருந்து தேவையான நிதி ஆதாரங்களை திரட்டவும் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

மேலும், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மற்றும் தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கிறது.

விமான பயணங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளை வழங்கும் ஏதேனும் அல்லது அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பாக டிக்கெட்டுகளை விற்பனை செய்தல், குடியுரிமை இல்லாத தமிழர்களுக்கு விபத்து மற்றும் சுகாதார காப்பீடு வழங்குதல்,

வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கும் அந்நிய செலாவணி வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கிறது.


செயல்பாடுகள் என்ன...:

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.

வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் அந்நாட்டு அரசாங்கம் ,பதிவு செய்யப்பட்ட அதிகார பூர்வமான வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் தான் ஆட்களை தேர்வு செய்வார்கள்.

அப்படி பதிவு செய்யப்பட்ட 3700 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 130 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வெளிநாட்டு வேலைக்காக மக்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வமான நிறுவனம் தான் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம். இது 1978 இல் தொடங்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் குறிப்பிட்ட நாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இட்டுள்ளதால், அந்நாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து நிறுவனத்துக்கு டிமாண்ட் லெட்டர் (Demand Letter) அனுப்புவார்கள். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அதற்கு தகுந்தாற் போல் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும்.

பதிவு செய்வது எப்படி...:

இந்நிறுவனத்தில் 4 பிரிவுகளின் கீழ் அயல்நாட்டு வேலைக்காக மக்கள் பதிவு செய்யலாம்.

திறன்பெறாத தொழிலாளர்கள், பகுதி திறன் கொண்ட தொழிலாளர்கள், திறமையான தொழிலாளர்கள்
டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டதாரிகள் (கலை/அறிவியல்/கணிதம்), செவிலியர்கள் மற்றும் பிற துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் தொழில்முறை/முதுகலை பட்டதாரிகள். MBBS டாக்டர்கள்/முதுகலை பட்டதாரிகள் (சிறப்பு மற்றும் ஆலோசகர் டாக்டர்கள்) ஆகியோர் பதிவு செய்யலாம்.

பதிவு செய்ய விரும்புபவர்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு 'SIGN UP' என்பதை அழுத்தி தங்களுடைய விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்யும் போது உபயோகத்தில் இருக்கும் தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை பயன்படுத்த வேண்டும்.
உங்களுடைய விவரங்களை பதிவு செய்தவுடன், உங்களுடைய மின்னஞ்சலுக்கு Activate Account என்ற link கிடைக்கும். அதன் பின்னர் User name மற்றும் Password பூர்த்தி செய்தவுடன் விண்ணப்படிவம் வரும். அதில் விவரங்களை பதிவு செய்து Submit கொடுத்தால் விண்ணப்பம் பதிவாகிவிடும்.

பதிவு செய்வதற்கு கட்டணம் உண்டு. மேலும் நீங்கள் விண்ணப்பங்களை உறுதி செய்து பதிவு செய்ததும், பணம் செலுத்துவதற்கு ஏதுவாக Net Banking, Credit card, Debit card போன்றவற்றை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.

நீங்கள் பணம் செலுத்திய பின்னர் உங்கள் இமெயிலுக்கு அக்னாலெஜ்ட்மெண்ட் தகவல் வந்து சேரும். ஒரு முறை நீங்கள் பதிவு செய்தால் அது 4 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது செல்போனில் பயன்படுத்தும் வண்ணம் OMCL என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கவனிக்க வேண்டியவை...

வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருத்தல் வேண்டும்.

21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் வேலைக்குரிய படிப்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
வேலைக்கான விசாவில் மட்டும்தான் வெளிநாட்டு வேலையில் சேர வேண்டும்
விசிட்டர் விசா, பிசினஸ் விசா போன்றவற்றின் அடிப்படையில் வெளிநாடு செல்லக்கூடாது.
பதிவு பெறாத முகவர்களிடம் வேலைக்காக அசல் கல்வி அனுபவ சான்றிதழ் பாஸ்போர்ட் மற்றும் பணம் ஆகியவற்றை அளித்தல் கூடாது.

பதிவு செய்த முகவர்களிடம் வேலை நிமித்தம் பணம் பாஸ்போர்ட் கல்வி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் கொடுத்தால் கண்டிப்பாக அதற்கான அத்தாட்சி ரசீது எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அயல்நாட்டு வேலைக்கு அனுப்பும் ஆட்களை அனுப்பும் பதிவு பெற்ற முகவர்கள் வேலை நிமித்தம் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை தீர்வு செய்யும் முறைகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டங்கள் போன்றவற்றை அறிய emigrate.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று படித்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Government of Tamilnadu realized the multiple advantages in meeting this demand. More Indians working abroad would mean greater inflow of foreign exchange, improvement in the quality of life of the families of such Indians and a step towards solving ever-growing unemployment problem. Also there is a large number of Indians aspiring to work abroad. The Overseas Manpower Corporation Limited (OMC) was thus incorporated in 1978. The chief objective being promoting employment of Indian manpower in foreign countries.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+